Ind vs Aus: டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!

நள்ளிரவு முதலே சேப்பாக்கத்தில் ரசிகர்கள் குவிந்தனர். காலை 11 மணிக்கு தொடங்கவிருந்த டிக்கெட் விற்பனைக்கு நள்ளிரவு 1.30 மணி முதல் ரசிகர்கள் வர தொடங்கிவிட்டனர். நீண்ட நெடும் வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் சிலர் போர்வைகளுடன் காணப்பட்டனர்.
Ind vs Aus 3rd ODI: டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் சேபாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!
Ind vs Aus 3rd ODI: டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் சேபாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!ட்விட்டர்
Published on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடக்கவிருக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு முன் ரசிகர்கள் குவிந்தனர்.

4 டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டிகள், மார்ச் 13 அன்று முடிவடைந்தது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியா மீண்டும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையில் மூன்று ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி நேற்று மும்பையில் நடந்தது. இதில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸியை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் மார்ச் 19 ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 ஆம் தேதியும் நடைபெறவுள்ளன

சென்னையில் நடைபெறவுள்ள மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட்கள் மார்ச் 13 இணையத்தில் கிடைக்குமென்றும், நேரில் வாங்க நினைப்பவர்களுக்கு இன்று வினியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.1200, அதிகபட்சமாக ரூ.10,000 என்பது குறிப்பிடத்தக்கது

Ind vs Aus 3rd ODI: டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் சேபாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!
CSK : தீபக் சஹர் அணிக்கு திரும்புவதில் சிக்கல்; மீளுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

இந்நிலையில், நள்ளிரவு முதலே சேப்பாக்கத்தில் ரசிகர்கள் குவிந்தனர். காலை 11 மணிக்கு தொடங்கவிருந்த டிக்கெட் விற்பனைக்கு நள்ளிரவு 1.30 மணி முதல் ரசிகர்கள் வர தொடங்கிவிட்டனர்.

நீண்ட நெடும் வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் சிலர் போர்வைகளுடன் காணப்பட்டனர். சேப்பாக்கம் சாலையில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டது, மேலும் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். கூடுதல் காவலர்களை வரவேற்கும் நிலை உருவானது.

இந்திய வீரர்கள் விளையாடுவதை நேரில் காண ஆவலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த மாத இறுதியில் ஐபிஎல் தொடங்கவிருப்பதால், சென்னை அணி சேப்பாகத்தில் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியும் சென்னை வந்துள்ளதால், அவரை காணவும் பலரும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தனர்.

Ind vs Aus 3rd ODI: டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் சேபாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!
தோனி 2023 ஐபிஎல்க்கு பிறகு ஓய்வு பெறுகிறாரா? கணித்த சுரேஷ் ரெய்னா - நெட்டிசன்ஸ் குதூகலம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com