2023 ஐபிஎல் தொடருடன் சென்னை அணியின் கேப்டன் எம் எஸ் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டும் அவர் விளையாடலாம் என கூறியுள்ளார் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தியன் பிரீமியர் லீக். அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த எம் எஸ் தோனியை சென்னை சுப்பர் கிங்க்ஸ் நிர்வாகம் வாங்கியது. அந்த ஏலத்திலேயே வைத்து தோனியை தங்கள் அணிக்கு வாங்குவது தான் எல்லா அணிகளும் முனைப்பாக இருந்தன.
2008 ஆம் ஆண்டின் ஐபில் தொடரின் முதல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக எம் எஸ் தோனி தான் இருந்தார். இவரை 6 கோடி ரூபாய்க்கு சொந்தமாக்கியது சிஎஸ்கே நிர்வாகம்
அந்த நாளுக்கு பின் நடந்தவையை வரலாறு இன்றும் பேசுகிறது. நடந்து முடிந்த 15 சீசன்களில் 11 முறை பிளே ஆஃபுக்கு சென்ற அணி, 4 முறை கோப்பை வென்ற அணி, முக்கியமாக தொடக்கத்திலிருந்து ஒரே கேப்டனை தக்கவைத்திருக்கும் அணி என்ற பெருமை எல்லாம் சிஎஸ்கேவுக்கு சேரும்.
சூதாட்ட சர்ச்சையில் சிக்கி அணி இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டிருந்த காலத்திலும், மீண்டும் தோனியை தங்கள் அணிக்கு விலைக்கு வாங்க மற்ற அணிகளுக்கு மத்தியில் கடும்போட்டி நிலவியது.
சிஎஸ்கே மட்டுமல்லாது இந்திய அணிக்கும் ஒரு மிக முக்கிய கேப்டனாக எம் எஸ் தோனி திகழ்ந்தார். 2015ல் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும், 2020ஆம் ஆண்டு அனைத்துவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வை அறிவித்தார்.
ஐபிஎல்லில் மட்டுமே விளையாடிவரும் இவர் விரைவில் இந்த போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என பரவலாக பேசப்பட்டது.
2020க்கு பிறகு ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும், தொடக்கத்திலும் தோனியிடம் வைக்கப்படும் கேள்வி, “நீங்கள் இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுகிறீர்களா? அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா?” என்பது தான்.
தோனியும் ஒவ்வொரு முறையும், “Definitely not, I Still haven't left behind" என்று பதிலளித்து வந்தார்.
2020ல் கொரோனா தொற்று பாதிப்புகள் இருந்ததால், ஐபிஎல் தொடர்கள் துபாயிலும், கடைசியாக 2022ஆம் ஆண்டின் தொடர் இந்தியாவிலும் நடந்தன.
அப்போது தோனி, “எனது கடைசி போட்டி சென்னையில் தான் இருக்கும். அதன் பிறகே ஓய்வு பெறுவேன். சென்னை எனக்கு இரண்டாவது தாயகம். சென்னையை நான் விட்டுக் கொடுக்கமாட்டேன்” என்றிருந்தார்.
இந்த ஆண்டுக்கான தொடர் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள், ஐபிஎல்லில் தோனியின் ஓய்வை கணித்து வருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டும் தோனி விளையாடலாம் என தெரிவித்துள்ளார் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா.
“தோனி சிறப்பாக விளையாடிவருகிறார், மேலும் ஃபிட்டாகவும் இருக்கிறார். இந்த சீசன் எப்படி செல்கிறது என்பதை பொறுத்து 2024ஆம் ஆண்டு சீசனிலும் தோனி விளையாட வாய்ப்பிருக்கிறது. கடந்த ஓராண்டாக அவர் விளையாடாததால் சற்று கடினமாக இருக்கலாம். அணியும் வலுவாக இருக்கிறது.” என்றார்
சுரேஷ் ரெய்னாவின் இந்த கணிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust