காடுகளை அழிக்க தான் இந்தியாவில் முதலில் பயன்பட்டதா? டிராக்டர்கள் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்

​​உழவு செய்வது முதல் விதை விநியோகம், அறுவடை வரை விவசாயத்தின் ஒவ்வொரு பகுதியிலும் டிராக்டரின் பங்கு உள்ளது.
Interesting Facts About Tractors
Interesting Facts About TractorsTwitter
Published on

டிராக்டர் விவசாயத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. விவசாயிகள் தோள்களில் உள்ள சுமையைக் குறைத்து, தங்கள் நிலத்தை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள உதவுகிறது.

உழவுக்கு மாடு போன்ற விலங்குகளை முதலில் பயன்படுத்தி வந்தனர். விலங்குகளை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்த வழக்கத்திலிருந்து மாறி, டிராக்டர் அல்லது இயந்திர பயன்பாடு, உற்பத்தித்திறனை அதிகரிக்க வழிவகுத்தது

விவசாயம் தொடர்பான செயல்பாடுகளை இது மிகவும் திறமையானதாக ஆக்கியுள்ளது. டிராக்டர்களின் கண்டுபிடிப்புகள் இன்னும் நவீன விவசாயத்தை ஊக்குவித்தது.

​​உழவு செய்வது முதல் விதை விநியோகம், அறுவடை வரை விவசாயத்தின் ஒவ்வொரு பகுதியிலும், டிராக்டரின் பங்கு உள்ளது. டிராக்டர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை இங்கு பார்ப்போம்

பயன்பாட்டில் உள்ள டிராக்டர்களின் எண்ணிக்கை

டிராக்டர்கள் விவசாயிகளுக்கு விலைமதிப்பற்ற சொத்து. தற்போது பயன்பாட்டில் உள்ள டிராக்டர்களின் எண்ணிக்கை அவற்றின் மதிப்பைக் காட்டுகிறது.

டிராக்டர் உற்பத்தியாளர்களின் விற்பனையின் அடிப்படையில், தற்போது சுமார் 16 மில்லியன் டிராக்டர்கள் செயல்பாட்டில் உள்ளன.

ஒரு பண்ணை இயங்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஆற்றலில் குறைந்தது மூன்றில் ஒரு பங்காவது டிராக்டர்களை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.

டிராக்டர் வலிமை குதிரைத்திறனில் அளவிடப்படுகிறது.

டிராக்டரின் வலிமை Horsepowerல் அளவிடப்படுகிறது. நீராவி என்ஜின்களின் வெளியீட்டை குதிரைகளின் சக்தியுடன் ஒப்பிட, 18 ஆம் நூற்றாண்டின் ஸ்காட்டிஷ் பொறியாளர் ஜேம்ஸ் வாட் என்பவர் இந்த ஹார்ஸ்பவர் பதத்தை உருவாக்கினார்.

டிராக்டர்கள் போன்ற பிற இயந்திரங்களின் வெளியீட்டை அளவிடுவதற்கு இது பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உலோக சக்கரங்கள்

1930களில், பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மிகப்பெரிய டயர்களுக்கு பதிலாக உலோக சக்கரங்களைக் கொண்டிருந்தன.

உழவர்கள் உலோகத் தகடுகள் மற்றும் எஃகு சக்கரங்களைக் கொண்டு டிராக்டர்களை ஓட்டி வந்தனர். பழைய டிராக்டர்களை சாலையில் இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. கரடுமுரடான நிலப்பரப்பில் விவசாயிகள் எளிதாக ஓட்டுவதற்கு நவீன கால டிராக்டர்களில் டயர்கள் இடம்பெற்றன.

டிராக்டர்கள் பெரும்பாலும் டீசல் என்ஜின்களால் தயாரிக்கப்படுகின்றன.

ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட டிராக்டர்கள்

காடுகள் அழிக்க, மற்றும் காடுகளில் உள்ள புதர்களை அழிக்க 1914 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முதல் டிராக்டரை அறிமுகப்படுத்தினர்.

நில உரிமையாளர்கள் 1930 வாக்கில் இந்த டிராக்டர்களை வாடகைக்கு எடுக்கத் தொடங்கினர். பின்னர் நடைமுறைக்கு வந்தது.

டிராக்டர்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர்கள்

இந்தியா உலகின் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இந்திய டிராக்டர் உற்பத்தி நிறுவனங்கள் ஆண்டுக்கு குறைந்தது 600,000 யூனிட்களை உற்பத்தி செய்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மாநிலங்களான பஞ்சாப், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை டிராக்டர் உற்பத்தியின் மையங்களாக உள்ளன.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டிராக்டர்கள் உலகம் முழுவதும் உள்ள மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Interesting Facts About Tractors
குவைத் : 192 மெட்ரிக் டன் மாட்டுச்சாணம் ஏற்றுமதி செய்யும் இந்தியா - பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com