நபிகள் நாயகம் குறித்த அவதூறு பிரச்சனைக்கு மத்தியில், இயற்கை விவசாயத்திற்காக குவைத்துக்கு 192 மெட்ரிக் டன் மாட்டுச் சாணத்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.
ஜெய்ப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனம் குவைத்துக்கு மாட்டுச் சாணத்தை ஏற்றுமதி செய்ய இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையில் இந்த மாதிரியான ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், குவத்தைச் சேர்ந்த லாமோர் என்கிற நிறுவனம் 192 மெட்ரிக் டன் நாட்டு மாட்டுச் சாணத்தை இறக்குமதி செய்ய ஆர்டர் செய்துள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த சன்ரைஸ் அக்ரிலேண்ட் மற்றும் டெவலப்மென்ட் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் இந்த ஆர்டரைப் பெற்றுள்ளது, என்று இந்தியக் கரிம உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் அதுல் குப்தா தெரிவித்தார்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் பிரசாந்த் சதுர்வேதி கூறுகையில், “இந்தியாவிலிருந்து நாட்டு மாடுகளின் சாணம் குவைத் இறக்குமதி செய்வது இதுவே முதல் முறை. ஜெய்ப்பூர், டோங்க் ரோடு, ஸ்ரீபிஞ்ச்ராபோல் கவுஷாலாவில் அமைந்துள்ள சன்ரைஸ் ஆர்கானிக் பூங்காவில், சுங்கத் துறையின் மேற்பார்வையில், மாட்டுச் சாணத்தைக் கொள்கலன்களில் அடைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் பாதி, ஜூன் 15-ம் தேதி கனகபுரா ரயில் நிலையத்திலிருந்து அனுப்பப்படும்” என்று தெரிவித்தார்.
2020-21 ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து விலங்கு பொருட்கள் ஏற்றுமதி 27,155.56 கோடி ரூபாய் என்று குப்தா கூறினார். இன்னும் கரிம உரத்தின் தேவை வெளிநாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நாடுகள் மாட்டுச் சாணத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்குப் பிறகு, அவை பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவற்றின் மூலம் பெறப்படும் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கடுமையான நோய்களிலிருந்து மனிதர்களை விடுவிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
பல நாடுகள் இந்தியாவிலிருந்து இயற்கை உரத்துடன், மாட்டுச் சாணத்தையும் இறக்குமதி செய்யத் தொடங்கியதற்கு இதுவே காரணம். குவைத்தின் வேளாண் விஞ்ஞானிகள், விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு, பேரீச்சம்பழத்தில் நாட்டுப் பசுவின் சாணத்தைப் பொடியாகப் பயன்படுத்துவதால், பழங்களின் அளவு அதிகரிப்பதோடு, உற்பத்தியும் எதிர்பார்த்த அளவு அதிகரிப்பதைக் கண்டறிந்துள்ளதாக அவர் கூறினார்.
மாட்டுச் சாணத்தை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. மொத்த அளவில் பெரும்பாலும் மாலத்தீவுகள், அமெரிக்கா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
கடந்த வாரம், பாஜக செய்தித் தொடர்பாளர்மாட்டுச் சாணத்தை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. மொத்த அளவில் பெரும்பாலும் மாலத்தீவுகள், அமெரிக்கா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
கடந்த வாரம், பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததையடுத்து, மற்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுடன் இணைந்து குறித்தும் இந்தியத் தூதரிடம் விளக்கம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மாட்டுச் சாணத்தை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. மொத்த அளவில் பெரும்பாலும் மாலத்தீவுகள், அமெரிக்கா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp