முடக்கத்தில் இருந்து மீண்டுவந்த irfan's view - இர்ஃபான் கூறுவது என்ன?
பிரபல உணவு யூடியூபர் இர்ஃபானின் இர்ஃபான் வியூ சேனல் நேற்று மாலையில் முடக்கப்பட்டு இன்று மதியம் மீண்டும் விடுவிக்கப்பட்டது.
ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக உணவு விமர்சன சேனலாக இயங்கி வரும் இர்ஃபான் வியூ திடீரென முற்றிலுமாக நீக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 'Community Guildlines Violation' எனச் சுட்டிக்காட்டி சேனல் டெர்மினேட் செய்யப்பட்டதாக இர்ஃபான் கூறியிருந்தார். அதனால் யூடியூப் நிறுவனத்துக்கு மெயில் செய்து முறையிட்டுள்ளார் இர்ஃபான். பல ஆண்டுக்கால உழைப்பு திடீரென காணாமல் போனதால் மன உளைச்சலுக்கு ஆளானார் இர்ஃபான். அவருக்கு சமூக வலைத்தளத்திலும் நேரடியாகக் கால் செய்தும் நண்பர்கள் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர்.
தொடர்ந்து யூடியூப் இர்ஃபானின் சேனலை மறு ஆய்வு செய்து மீண்டும் இன்று மதியம் விடுவித்துள்ளது. தனது சேனல் முடக்கத்தின் போது ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றியும் வெறுப்புடன் “உனக்கு இது தேவைதான்” எனக் கூறியவர்களுக்கு அட்வைசும் அளித்து We’re Back என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார் இர்ஃபான்.
பொதுவாக ஒரு சேனலை முடக்குவதற்கு முன்னர் யூடியூப் சில எச்சரிக்கைகளை விடுக்கும் யூடியூப் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தனது சேனல் முடக்கப்பட்டதாகக் கூறும் இர்ஃபான் இனி யாருக்கும் இது போல நடக்காமல் இருக்க யூடியூப் தவறுகளைச் சரி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.