ஜல்லிக்கட்டு : முதல் பரிசாக வழங்கப்படும் ஸ்டைலிஷ் கார் - விலை என்ன தெரியுமா?

நிஸான் மாக்னைட் கார் சாம்பல் நிறத்தில் வாடிவாசலில் ஜொலிக்கிறது. 5 பேர் அமரும் வசதி கொண்ட இந்த கார், நகரத்தில் ஓட்டுவதற்கு சிறந்தது எனக் கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டு : முதல் பரிசாக வழங்கப்படும் ஸ்டைலிஷ் கார் - விலை என்ன தெரியுமா?
ஜல்லிக்கட்டு : முதல் பரிசாக வழங்கப்படும் ஸ்டைலிஷ் கார் - விலை என்ன தெரியுமா?Twitter
Published on

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக அவனியாபுரத்தில் தொடங்கியது.

மதுரை ஜில்லாவே ஜல்லிக்கட்டு பிரபலம் தான். இன்றும் நாளையும் நாளை மறுநாளும் முறையே அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை.

மாட்டின் கொம்பில் கட்டிவிடப்படும் சல்லிக்காசை எடுப்பவர் தான் வெற்றியாளர் என்ற விதி முற்காலத்தில் இருந்தது. இந்த பரிசை முன்னிட்டு தான் 'ஜல்லிக்கட்டு' என்ற பெயரே வந்தது.

<div class="paragraphs"><p>ஜல்லிக்கட்டு</p></div>

ஜல்லிக்கட்டு

Twitter 

இதன் மூலம் ஜல்லிக்கட்டில் பரிசுகள் எந்த அளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் வீரர்களுக்கு பலவகையான பரிசுகள் வழங்கப்படுகின்றன. பல அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் தங்க நாணயங்களை வழங்குகின்றன. பாத்திரங்கள், கட்டில், பீரோ போன்ற பரிசுகள் அடங்காத காளையின் உரிமையாளருக்கும் அடக்கும் வீரருக்கும் வழங்கப்படுகின்றன.

இரண்டாவது இடம் பெறும் வீரருக்கும் சிறந்த காளைக்கும் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு : முதல் பரிசாக வழங்கப்படும் ஸ்டைலிஷ் கார் - விலை என்ன தெரியுமா?
Jallikattu Live : ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலையில் காணுங்கள்

நிஸான் மாக்னைட் கார்

முதல் பரிசு பெறும் வீரருக்கு தமிழக முதலமைச்சர் சார்பில் நிஸான் காரை பரிசாக வழங்கப்படுகிறது.

நிஸான் மாக்னைட் கார் சாம்பல் நிறத்தில் வாடிவாசலில் ஜொலிக்கிறது. 5 பேர் அமரும் வசதி கொண்ட இந்த கார், நகரத்தில் ஓட்டுவதற்கு சிறந்தது எனக் கூறப்படுகிறது.

2020ம் ஆண்டு சந்தைக்கு கொண்டுவரப்பட்ட இந்த வாகனம் 5.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை விலையில் கிடைக்கிறது.

வீரர்கள் தீரத்துடன் இந்த காளைகளைப் பிடிக்க ஊக்கமாக, கம்பீரமாக நிற்கிறது இந்த கார்.

ஜல்லிக்கட்டு : முதல் பரிசாக வழங்கப்படும் ஸ்டைலிஷ் கார் - விலை என்ன தெரியுமா?
ஜல்லிக்கட்டு : 9,699 காளைகள்; 5,399 வீரர்கள் பதிவு- யார் நடத்துகின்றனர்?- விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com