நீதிமன்றத்திற்கு ’சிங்கம்’ பட பாணியில் மீசையுடன் வந்த காவலருக்கு நீதிபதி அறிவுரை வழங்கியதையடுத்து அதனை உடனடியாக அந்த காவலர் சரி செய்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அம்பலமூலா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ராஜேஷ் கண்ணன்.
அவர் அந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட வழக்கு ஒன்றிற்காக உதகையிலுள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
ராஜேஷ் கண்ணன் சிங்கம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா வைத்திருப்பது போல மீசை வைத்திருந்தார். இதைப் பார்த்த நீதிபதி நேர்த்தியாக மீசையை சரிசெய்ய வேண்டும் என்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, மீசையை சரி செய்து மீண்டும் நீதிமன்றத்துக்குள் ராஜேஷ் கண்ணன் வந்தார். இந்த விவகாரம் பரவியதையடுத்து, பலரும் இதற்குக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சிலர் இது அவரின் தனிப்பட்ட விருப்பம் எனக் கருத்துக்களை கூறி வந்த நிலையில், இது தொடர்பாக காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில்,
“காவலர் அடையாள அட்டையில் இருக்கும் புகைப்படத்தைப் போன்று தான், அவர்கள் பணியில் இருக்கும் வரை இருக்க வேண்டும்.
அதையும் தாண்டி குடும்ப நிகழ்வுக்காக மொட்டை அடித்தாலோ அல்லது பெரிய மீசை வைத்தாலோ உயர் அதிகாரியிடம் முறையாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதி.
அடையாள அட்டையில் உள்ளபடி இல்லாததால் நீதிபதி அவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்” எனக் கூறப்பட்டிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust