தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் விலகல் - காரணம் என்ன?

"சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது!" எனவும் எழுதியிருக்கிறார்.
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன்  விலகல் - காரணம் என்ன?
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் விலகல் - காரணம் என்ன?Twitter
Published on

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் விவாத நிகழ்ச்சிகளில் நீயா நானா, தமிழா தமிழா நிகழ்ச்சிகள் அதிகமாக மக்கள் வரவேற்பைப் பெற்றன.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தமிழா தமிழா நிகழ்ச்சி குறுகிய காலத்தில் அதிகமாக பிரபலமடைந்தது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் அதன் தொகுப்பாளர் கரு பழனியப்பன்.

இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் கரு பழனியப்பன்.

நேற்று (மார்ச் 6) பிறந்தநாள் கொண்டாடிய கரு பழனியப்பன் வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி சொல்லும் பதிவில் இந்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில், "முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க , வழிகாட்டி இருக்கிறது..

தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட " தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது...!" என அறிவித்தார்.

மேலும், "சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது!" எனவும் எழுதியிருக்கிறார்.

தமிழா தமிழா நிகழ்ச்சி மூலம் கரு பழனியப்பன் முற்போக்கு கருத்துகளைப் பேசிவந்தார்.

பெண்கள் உரிமை, அம்பேத்கர், பெரியார், நவீன காதல், உறவுமுறைகள் என பல தலைப்புகளில் சமூகத்தை எதிரொலித்தது தமிழா தமிழா நிகழ்ச்சி.

தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன்  விலகல் - காரணம் என்ன?
சன் டிவி விருது மேடையில் கணவர் பெயரைக் குறிப்பிடாத கேப்ரியல்லா - காரணம் இதுதான்

கரு பழனியப்பன் பேஸ்புக் பதிவுக்கு பிறகு அவருக்கு ஜி தமிழ் தொலைக்காட்சியில் அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

அதே பதிவில், "எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் , விரைவில் சந்திப்போம்!!" எனவும் சேர்த்துள்ளார் கரு பழனியப்பன்.

தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன்  விலகல் - காரணம் என்ன?
ஃபாக்ஸ் vs சிஎன்என் : அமெரிக்க தொலைக்காட்சி வரலாற்றை புரட்டிப் போட்ட ஓர் ஆய்வு

மந்திர புன்னகை, பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம், ஜன்னல் ஓரம் மற்றும் சிவப்பதிகாரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் கரு பழனியப்பன்.

இப்போது நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், மேடைப் பேச்சாளராகவும் இயங்கி வருகிறார். இவர் சமூக வலைத்தளங்கள் மூலம் 2கே கிட்ஸ் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார்.

தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன்  விலகல் - காரணம் என்ன?
நீயா? நானா? : கோபிநாத் செய்தது சரியா? தவறா? - இணையத்தில் எழுந்த விவாதம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com