விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான நீயா? நானா? சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று 'கணவர்களை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள்' என்ற தலைப்பில் நடந்த விவாதம் இணையத்தை கலக்கியது. நெட்டிசன்கள் அந்த விவாதம் குறித்த தங்களது கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
மகளின் மதிப்பெண் அட்டையை தந்தை ஒரு மணிநேரமாக பார்ப்பது குறித்து தாயார் விவாதத்தை எழுப்பினார்.
"என் மகள் 90, 81, 75 -ன்னு மார்க் எடுக்குறது எனக்கு பெருமையா இருக்கு சார். அவ படிச்சு டாக்டர் ஆகணும்னு ஆசை. அவ ஆசை தான், அத நிறைவேத்தி வைக்க எனக்கு ஆசை" என்று கூறும் வெள்ளந்தி அப்பா நேற்றைய கதையின் நாயகனான் ஆனார்.
"ஆனந்தமா இருக்க அறிவா இருக்கணும்னு அவசியம் இல்ல" என புத்திமதி கூறிய கோபிநாத் அந்த தந்தைக்கு நிகழ்ச்சியின் இறுதியில் கொடுக்கப்படும் பரிசை வழங்கினார்.
"அவரு நெஜமாவே தோக்கல" என்ற மகளின் மழலை மொழி அனைவரது கண்களிலும் நீர் கோர்க்க வைத்தது. இந்த வீடியோவை முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
"ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா" என்று நடிகை பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
கோபிநாத் நிகழ்ச்சியை எடுத்துச் சென்ற விதம் சிலருக்கு நன்றானதாக இல்லை தான். இந்த நிகழ்ச்சி, கோபிநாத் vs கருப்பழனியப்பன் என்ற சண்டைக்குள்ளும் ரசிகர்களை இழுத்துச் சென்றிருக்கிறது.
"எல்லாரும் சமம் தான டீச்சர்" என்று கூறிய மாணவனை மேடையில் நிறுத்தி அவனது சிகை அலங்காரத்தைக் காட்டி, முடியை வைத்து மனிதர்களை மதிப்பிடுவதை கடுமையாக சாடினார் கோபிநாத்.
வீட்டு முதலாளிகள் - வேலைக்காரர்கள் என்ற தலைப்பு பெரு நகரங்களில் நிலவும் மனித நேயமற்ற நிலையை எடுத்துக்காட்டியது.
இந்த வாரமும் வெள்ளந்தி மனிதரின் சுய மரியாதையைக் காப்பதாக அமைந்தது. சமூக பிரச்னைகளுக்கு, சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு குரல் கொடுத்து வரும் நீயா, நானா நிகழ்ச்சி 2கே கிட்ஸிடம் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust