"நல்ல photo போடுங்க பா" கிருத்திகா உதயநிதி நக்கல் ட்வீட்- உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?

இந்த அறக்கட்டளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதிக்கு சொந்தமானது என செய்திகள் பரவி வருகிறது. அமலாக்கத்துறையின் செய்தியில், M/S Udhayanidhi Foundation என்றிருப்பது தான் காரணம்
"நல்ல photo போடுங்க பா" கிருத்திகா உதயநிதி நக்கல் ட்வீட்- உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?
"நல்ல photo போடுங்க பா" கிருத்திகா உதயநிதி நக்கல் ட்வீட்- உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?ட்விட்டர்

என்னை பற்றி வதந்தி பரப்புவோர் அட்லீஸ்ட் நல்ல புகைப்படம் பயன்படுத்துங்கள் என இயக்குநர் கிருத்திகா உதயநிதி பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் முக்கிய நிறுவனங்கள், புள்ளிகளின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை கல்லல் குழுமத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பெற்றுள்ளதை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, உதயநிதி ஃபவுண்டேஷன் வங்கி கணக்கிலிருந்து ரூ.34.7 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கல்லல் குழுமத்திற்கு சொந்தமான 36 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த அறக்கட்டளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதிக்கு சொந்தமானது என செய்திகள் பரவி வருகிறது. அமலாக்கத்துறையின் செய்தியில், M/S Udhayanidhi Foundation என்றிருப்பது தான் காரணம்

"நல்ல photo போடுங்க பா" கிருத்திகா உதயநிதி நக்கல் ட்வீட்- உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?
காதலிப்பதை வெளிப்படுத்த பயம் எதற்கு? - கிருத்திகா உதயநிதி ட்வீட்

இது குறித்து பேசிய கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூலாக ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அந்த ட்விட்டர் பதிவில்,

"என்னை பற்றி போலி செய்தி பரப்புபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்லீஸ்ட் நல்ல ஃபோட்டோவ பயன்படுத்துங்க" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதியும், கூலாக சிரிக்கும் எமோஜி ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இவர்களது ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"நல்ல photo போடுங்க பா" கிருத்திகா உதயநிதி நக்கல் ட்வீட்- உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?
"இன்பநிதிக்கு 18 வயசாகிருச்சு" - கிருத்திகா ட்வீட் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com