"இன்பநிதிக்கு 18 வயசாகிருச்சு" - கிருத்திகா ட்வீட் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில் என்ன?

இன்பநிதி குறித்த விமர்சனங்களுக்கு கிருத்திகா உதயநிதி கொடுத்த பதில் குறித்து உதயநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்காக அவர் அளித்த பதில் தான் தற்போது நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
"இன்பநிதிக்கு 18 வயசாகிருச்சு" - கிருத்திகா ட்வீட் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில் என்ன?
"இன்பநிதிக்கு 18 வயசாகிருச்சு" - கிருத்திகா ட்வீட் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில் என்ன?Twitter

உதயநிதி ஸ்டாலின் - கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. காதல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு இன்பநிதி, தன்மயா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் இன்பநிதி தனது தோழியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலானது.

இதற்கு பலரும் தங்களும் தங்களின் கருத்துகளை தெரிவித்திருந்தனர். உதயநிதி அமைச்சர் ஆனதில் இருந்தே அவரது மகன் இன்பநிதியும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் இன்பநிதி தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு பல்வேறு தரப்பினர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கிருத்திகா உதயநிதி ட்விட்டரில் காதல் குறித்து பதிவிட்டிருந்தார்.

அதில், "காதலிப்பதற்கும், காதலை வெளிப்படுத்துவதற்கும் பயம் வேண்டாம். இயற்கையின் அழகை புரிந்துக்கொள்ள இதுவும் ஒரு வழி” என்று தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

Udhayanidhi Stalin
Udhayanidhi StalinTwitter

இந்த நிலையில் ”கண்ணை நம்பாதே” படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினின் youtube சேனல் ஒன்றிருக்கு நேர்காணல் கொடுத்திருந்தார்.

அப்போது இன்பநிதி குறித்த விமர்சனங்களுக்கு கிருத்திகா உதயநிதி கொடுத்த பதில் குறித்து உதயநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்காக அவர் அளித்த பதில் தான் தற்போது நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

"இன்பநிதிக்கு 18 வயசாகிருச்சு" - கிருத்திகா ட்வீட் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில் என்ன?
மன அழுத்தம் டு காதல் திருமணம்; காப்பகத்தில் மலர்ந்த காதல் - ஒரு நெகிழ்ச்சி கதை!

”இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை அவருக்கு 18 வயதாகிவிட்டது அவரது தோழியுடன் அவர் போட்டோ பகிர்கிறார்.

இது அவருடைய தனிப்பட்ட உரிமை, இது பற்றி கேள்வி கேட்பதற்கு பெற்றோரான நாங்கள் மற்றும் அவரது தாத்தா பாட்டியை தவிர யாருக்கும் உரிமை இல்லை

அவருக்கு ஓரளவுக்கான சுதந்திரத்தை நாங்கள் கொடுத்து இருக்கிறோம். அதன்படி அதற்கான எல்லையில் ஒரு 18 வயது பையன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார்.

இந்த மாதிரி குடும்பத்தில் இருந்து வரும் போது சர்ச்சைகள், கேள்விகள், கிண்டல்கள் வருவது எதார்த்தம் தான்.

இதெல்லாம் காதில் எடுத்துக் கொண்டால் வாழ்க்கை வாழ முடியாது. குறிப்பாக மற்றவருக்காக நம் வாழ்க்கையை வாழ முடியாது. அந்த 18 வயது சிறுவனுக்கான சுதந்திரத்தை அவனுக்கு கொடுக்கணும் அதுக்காக அவங்க ”அம்மா போட்ட போஸ்ட்” தான் இது என்று உதயநிதி நச் என்று பதில் அளித்திருந்தார்.

தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

"இன்பநிதிக்கு 18 வயசாகிருச்சு" - கிருத்திகா ட்வீட் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில் என்ன?
”மாமன்னன் தான் என் கடைசி படம்” - சினிமாவிலிருந்து விலகும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com