
பொதுவாக கோடை விடுமுறைக்கு குளர்ச்சியான இடத்தை தேடி செல்வது வழக்கம். தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மலை பிரதேசங்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, மூணார், ஏற்காடு, கொல்லி மலை, ஜவ்வாது மலை, சிறு மலை என்று எல்லா பக்கமும் மக்கள் குவிந்து வருகின்றனர்.
மாநிலத்திற்குள் என்றாலும் செலவு அதிகமாகும் என்று பயணிகள் நினைப்பார்கள்.
தனியாக வாகனம் எடுத்து சுற்றி பார்க்க எல்லாராலும் முடியாது, அதற்கு தான் அரசே ஒரு சூப்பர் சுற்றுலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை கொடைக்கானலில் வெறும் 150 ரூபாய் கொடுத்தால் அரசு பேருந்தில் 12 சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த பேருந்துகள் முன் பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்தும் இந்த சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அப்படி கொடைக்கானலில் எந்த இடங்களை எல்லாம் இந்த சுற்றுலா பேக்கேஜில் பார்க்க முடியும் என்பதை பார்க்கலாம்.
1. லேக் வியூ பாயிண்ட்
2. மோயர் பாயிண்ட்
3. பைன் காடுகள்
4. குணா குகை
5. தூண் பாறை
6. பசுமைப் பள்ளத்தாக்கு
7. கோல்ஃப் மைதானம்
8. பாம்பார் ஆறு
9. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்
10. கோக்கர்ஸ் வாக்
11. பிரையண்ட் பார்க்
12. கொடைக்கானல் ஏரி
இந்த பேக்கேஜுக்கு ஒரு நபருக்கு 150 ரூபாய் பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு ரூ 75 வசூலிக்கப்படும்.
இந்த சிறப்பு பேருந்துகளில் 'இயற்கை எழில் காட்சி 'Natural Scene' என குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு இடத்திலும் சுற்றுலா பயணிகள் அந்த இடத்தை பார்த்து ரசிக்க போதுமான நேரம் ஒதுக்கப்படுகிறது. இந்த ஆஃபர் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்கள் செயலில் இருக்கும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust