கொடைக்கானல் : முக்கிய சுற்றுலா தலங்களை முன்கூட்டியே மூடும் வனத்துறை - ஏன்?
கொடைக்கானல் : முக்கிய சுற்றுலா தலங்களை முன்கூட்டியே மூடும் வனத்துறை - ஏன்?Twitter

கொடைக்கானல்: முக்கிய சுற்றுலா தலங்களை முன்கூட்டியே மூடும் வனத்துறை - ஏன்?

நேற்று வனத்துறை சுற்றுலா இடங்களை மாலை 4.30 மணிக்கே மூடியது. அதுமட்டுமில்லாமல் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
Published on

பொதுவாக விடுமுறைக்கு குளர்ச்சியான இடத்தை தேடி செல்வது வழக்கம். அந்த வகையில் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு மக்கள் படையெடுத்துள்ளனர்.

ஆனால் கொடைக்கானலின் சுற்றுலா தலங்களை வனத்துறையினர் முன்கூட்டியே மூடியதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

வழக்கமாக தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.

தொடர் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்கு அலைமோதுகிறது.

இந்நிலையில் நேற்று வனத்துறை சுற்றுலா இடங்களை மாலை 4.30 மணிக்கே மூடியது. அதுமட்டுமில்லாமல் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

கொடைக்கானல் : முக்கிய சுற்றுலா தலங்களை முன்கூட்டியே மூடும் வனத்துறை - ஏன்?
மதுரை To கொடைக்கானல்: உள்ளூர் மக்களை கவர ஒரு நாள் சுற்றுலா - எந்தெந்த இடங்கள் பார்க்கலாம்?

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருக்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் கூடுதல் நேரம் சுற்றுலா தலங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கொடைக்கானல் வனத்துறையினர் கூறுகையில், சுற்றுலா இடங்களில் காட்டு மாடுகள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, முன்கூட்டியே சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன என்றனர்.

கொடைக்கானல் : முக்கிய சுற்றுலா தலங்களை முன்கூட்டியே மூடும் வனத்துறை - ஏன்?
கொடைக்கானல் : ஏரியில் உருவாகிறதா மிதவை உணவகம்? நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com