பெரம்பலூரில் இப்படி ஒரு அருவியா? காட்டுப்பகுதிக்குள் இருக்கும் கோரையாறு குறித்து தெரியுமா?
பெரம்பலூரில் இப்படி ஒரு அருவியா? காட்டுப்பகுதிக்குள் இருக்கும் கோரையாறு குறித்து தெரியுமா?Twitter

பெரம்பலூரில் இப்படி ஒரு அருவியா? காட்டுப்பகுதிக்குள் இருக்கும் கோரையாறு குறித்து தெரியுமா?

ஓடையின் அழகும், மூலிகை மரமும், அமைதியான இடத்தில் ஆர்பரிக்கும் அருவியின் எழிலும் உங்களை எங்கிருந்து வந்தீர்கள் என்பதை மறக்க செய்யும்.
Published on

பெரம்பலூர் மாவட்டதின் கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பச்சைமலை. இங்கு தான் இந்த கோரையாறு நீர்வீழ்ச்சியும் உள்ளது.

சுமார் 30 அடி உயரத்தில் மலை உச்சியிலிருந்து மூலிகை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் இந்த இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கம் உள்ளது.

இதனால், கோரையாறு அருவியில் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சென்று குளிக்க முடியும். இந்த அருவியில், சாதாரண மழைபெய்தால் கூட நீர் கொட்டுமாம்.

என்ன தான் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருந்தாலும் இந்த அருவியை அக்டோபர் மாதத்தின் இறுதியில் தொடங்கி, நவம்பர், டிசம்பர் மாதங்களில் விசிட் செய்தால் சிறப்பாக இருக்கும்.

அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஓடையின் அழகும், மூலிகை மரமும், அமைதியான இடத்தில் ஆர்பரிக்கும் அருவியின் எழிலும் உங்களை எங்கிருந்து வந்தீர்கள் என்பதை மறக்க செய்யும்.

30 அடி உயரத்திலிருந்து கருங்கல் பாறைகள் சூழ்ந்த 60 அடி ஆழம் கொண்ட குளத்திற்குள் ஆர்ப்பரித்தபடி அருவி நீர் கொட்டுவதை கண்டால் உள்ளமே கொள்ளை போகும்.

பெரம்பலூரில் இப்படி ஒரு அருவியா? காட்டுப்பகுதிக்குள் இருக்கும் கோரையாறு குறித்து தெரியுமா?
பச்சமலை: திருச்சியில் ஒரு பசுமை சொர்க்கம் - அருவிகளுக்கு ஆஃப்ரோட் பயணம் செல்ல தயாரா?

இந்த அருவியில் கொட்டும் தண்ணீர் கோரையாறு, தொண்டமாந்துறை வழியாக கல்லாற்றில் கலக்கிறது.

அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அமைந்த அருவி, கருங்கல் பாறைகள் சூழ்ந்த குளம் என கண்டிப்பாக அந்த ஸ்பாட் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை கொடுக்கும்.

திருச்சி சென்றால் நிச்சயம் இந்த இடத்தை தவறாமல் பார்த்துவிடுங்க!

பெரம்பலூரில் இப்படி ஒரு அருவியா? காட்டுப்பகுதிக்குள் இருக்கும் கோரையாறு குறித்து தெரியுமா?
Summer vacation : வெறும் 30 ரூபாய் போதுமா? கிருஷ்ணகிரியில் இருக்கும் சூப்பர் பட்ஜெட் Spot

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com