பட்டாம்பூச்சிக் கூட்டம், மலைவாழ் மக்கள், தேன், பலாப்பழம், பெரிய ஆலமரங்கள், சில்லென்ற காற்று, பூக்கள், மூலிகைகளின் நறுமணம் என வசந்தத்தின் குறியீடுகளைக் கடந்து செல்ல வேண்டிய மலை தான் பச்சமலை.
பச்சைமலை சுமார் 19,076 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,400 அடி உயரத்தில் இருக்கிறது.
இது, வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாதுகாப்புக்குக் கொஞ்சமும் குறைவில்லை என்கிறார்கள் சுற்றுலாப்பயணிகள்.
திருச்சி, பெரம்பலூர், சேலம் என மூன்று மாவட்டங்களை இணைக்கும், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் ’மகாராணி’யாக விளங்குகிறது இந்தப் பச்சைமலை.
அரசு சார்பில் குறிப்பிட்ட அளவில் தங்கும் விடுதிகள் உள்ளன. அங்கு வீட்டோடு இருக்கும் சிறிய கடையில் சமைத்துக் கொடுக்கச் சொன்னால், அதற்கு உண்டான தொகையை வாங்கிக் கொண்டு நாம் கேட்பவற்றைச் சமைத்துத் தருகிறார்கள்.
பச்சமலைப் பயணத்தில் மயில்கள், குயில்கள் அரிய வகைக் குருவிகள், பறவைகளையும், மான், காட்டுப்பூனை போன்ற விலங்குகளையும் மூலிகைச் செடிகளையும் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கலாம்.
பச்சமலையில் ’மங்களம் அருவி’ மட்டுமல்ல ’எருமைப்பள்ளி அருவி’, ’மயிலூற்றுஅருவி’, ’கோரையாறு அருவி’ என நான்கு அருவிகள் இருக்கின்றன. சுற்றுலாப்பயணிகள் குளிக்க மங்கலம் அருவி, கோரையாறு அருவி உகந்ததாக இருக்கும்.
அருவிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் ஆஃப்ரோட் பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். நண்பர்களுடன் அட்வென்சராக பயணிக்கலாம்.
திருச்சியிலிருந்து துறையூர் சென்று, அங்கிருந்து ஆத்தூர் சாலையில் சென்று உப்பிலியபுரம், அங்கிருந்து சோபனபுரம் வழியாகப் பச்சைமலையின் மேல் பயணிக்கலாம்.
இல்லையென்றால், பெரம்பலூர் சாலையில் சென்றால் செங்காட்டுப்பட்டி என்ற ஊரின் வழியாக மூலக்காடு என்ற இடத்திற்குச் சென்று அங்கிருந்து பச்சைமலை செல்லலாம்.
இரண்டு பக்கம் சென்றாலும் அருவிகள், பச்சைக்காடுகள், வயல்வெளிகள் எனக் கண்ணுக்கு விருந்தளிக்கும் விஷயங்கள் ஏராளம்.
பேருந்து மூலம் பச்சமலைக்கு செல்ல வழி இருந்தாலும் சொந்த வகனத்தில் செல்வது சிறப்பு.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust