அரசியலுக்கு வருகிறாரா KPY பாலா? அவரே சொன்ன பதில்!

"நான் கிராண்டாக வாழவில்லை. ஒரு நாளுக்கு 500 ரூபாய் இருந்தாலும் 100 ரூபாய் இருந்தாலும் 50 ரூபாய் இருந்தாலும் ராஜா மாதிரி வாழ எனக்குத் தெரியும். "
அரசியலுக்கு வருகிறாரா KPY பாலா? அவரே சொன்ன பதில்!
அரசியலுக்கு வருகிறாரா KPY பாலா? அவரே சொன்ன பதில்!Twitter

நடிகர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் சாதாரணமாக பார்க்கப்படுகிறது. ஒரு நடிகர் நாலு பொது இடங்களில் தலைக்காட்டி விட்டாலே நீங்கள் அரசியலுக்கு வருகிறீர்களா எனக் கேட்கத்தொடங்கிவிடும் சமூகம்.

விஜய் டீவியில் நடந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் பாலா. குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் தனக்கென ரசிகர்களை உண்டாக்கிக்கொண்டவர்.

யூடியூப் வீடியோஸ், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கும் பாலா, சென்னை பெரு வெள்ளத்தின் போது மக்களுக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை செய்துள்ளார்.

சென்னை பெருவெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டதை அறிந்த பாலா நேரடியாக அங்கு சென்றுள்ளார். தன்னிடம் இருந்த பணத்தில் பல வீடுகளுக்கு வீட்டுக்கு 1000 ரூபாய் வழங்கியுள்ளார்.

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாலா, "நான் கிராண்டாக வாழவில்லை. ஒரு நாளுக்கு 500 ரூபாய் இருந்தாலும் 100 ரூபாய் இருந்தாலும் 50 ரூபாய் இருந்தாலும் ராஜா மாதிரி வாழ எனக்குத் தெரியும்.

என்னைப் பற்றி வீட்டில் குறை சொன்னாலும் என் அம்மா, "என் பையன் ஏதாவது நல்லது பண்ணி ஒன்னுமில்லாம போனா பரவால்ல" என்றே பதில் சொல்கிறார்.

நான் எந்த கட்சியிலும் இல்லை. 2017ல் இருந்து உதவிகள் செய்து வருகிறேன். இப்போதுதான் இன்ஸ்டாகிராம் புளூடிக் வரை வந்திருக்கிறேன் அதுகுள்ள பாலிடிக்ஸா?" எனக் கேட்டுள்ளார்.

அரசியலுக்கு வருகிறாரா KPY பாலா? அவரே சொன்ன பதில்!
சென்னை : ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000 கிடைக்குமா? வெளியான தகவலின் பின்னணி என்ன?

மேலும் பாலா, "கட்சியில் சேர்ந்து பணியாற்றும் அளவு எனக்கு தகுதியில்லை. எப்போதும் என்னை சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்திருக்கிறேன். அப்படித்தான் இந்த உதவிகள் செய்வதெல்லாம்.

என்னால் முடியும் வரை எப்போதும் உதவிகள் செய்கிறேன். இதற்கு முன் செய்ய நினைத்தபோது பணம் இல்லை. போன வெள்ளத்தில் நானே தத்தளித்துக்கொண்டிருந்தேன். இப்போது பணம் இருக்கிறது. என்னால் முடிந்தவரை தொடர்ந்து மக்களுக்கு உதவுவேன்" எனப் பேசியுள்ளார்.

முன்னதாக நடிகர் பாலா சிறிய கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு வருகிறாரா KPY பாலா? அவரே சொன்ன பதில்!
சென்னை: 'அட்டை பெட்டியில் மகளை தூக்கிச்செல்லும் அப்பா - கலங்க வைக்கும் பின்னணி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com