வெறும் ரூ.300 போதுமா? ராமேஸ்வரத்தில் இருக்கும் ”மினி அந்தமான் ” - குருசடை தீவு தெரியுமா?

தமிழ்நாட்டில் இருக்கும் மினி அந்தமான் தீவு குறித்து தான் சொல்லபோகிறோம். தமிழகத்தில் அந்தமான் தீவா? என்று தானே யோசிக்கிறீர்கள், ராமேஸ்வரத்தின் குருசடை தீவு தான் அது!
வெறும் ரூ.300 போதுமா? ராமேஸ்வரத்தில் இருக்கும் ”மினி அந்தமான் ” - குருசடை தீவு தெரியுமா?
வெறும் ரூ.300 போதுமா? ராமேஸ்வரத்தில் இருக்கும் ”மினி அந்தமான் ” - குருசடை தீவு தெரியுமா?Twitter
Published on

ட்ராவல் செய்வது பொழுதுபோக்கு என்பதை தாண்டி பலருக்கு மன அமைதியை தரும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. வெளிநாடு, வெளிமாநிலம் என பல இடங்களுக்கு சென்றாலும், தமிழ்நாட்டிலேயே பார்க்க அவ்வளவு இடங்கள் கொட்டி கிடக்கின்றன.

மலைப்பிரதேசங்கள், கோட்டைகள், கோவில்கள், அழகிய நகரங்கள் என தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களுக்கு பஞ்சமே இல்லை.

சேலத்தில் குட்டி கேரளா, தர்மபுரியில் மினி ஊட்டி என பல பிரமிக்க வைக்கும் இடங்கள் இங்கு உள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் இருக்கும் மினி அந்தமான் தீவு குறித்து தான் சொல்லபோகிறோம். தமிழகத்தில் அந்தமான் தீவா? என்று தானே யோசிக்கிறீர்கள், ராமேஸ்வரத்தின் குருசடை தீவு தான் அது!

ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது. ராமேஸ்வரத்தில் பாம்பன் தொடங்கி தூத்துக்குடியில் உள்ள மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் இருக்கின்றன. இதில் குருசடை தீவு மிக முக்கியமானது.

ராமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் தான் அழகிய குருசடை தீவு அமைந்துள்ளது.

குருசடை தீவு ஏறத்தாழ 66 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளது. ஒரு நாள் பிக்னிக் செல்ல ஆசை இருந்தால் இந்த இடத்திற்கு தாராளமாக சென்று விட்டு வரலாம்.

சுற்றிலும் கடல், நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து, ஆரவாரமில்லாத அலை ஓசை, தெளிவான நீர், பவளப்பாறைகள், அரிய கடல் உயிரினங்கள், படகு சவாரி என இந்த இடம் ஒரு நாள் சுற்றுலாவுக்கு இந்த குருசடை சூப்பர் ஸ்பாட் என்றே சொல்லலாம்.

வெறும் ரூ.300 போதுமா? ராமேஸ்வரத்தில் இருக்கும் ”மினி அந்தமான் ” - குருசடை தீவு தெரியுமா?
சென்னையில் இப்படி ஒரு டூரிஸ்ட் place இருக்கா? குடும்பத்தோடு செல்ல சூப்பர் weekend spot!

தீவை சுற்றி உள்ள கடல் பகுதியில் நட்சத்திர மீன்கள், சிப்பிகள், கடல் அனிமோன்கள், நண்டுகள், கடல் பாசிகள், டால்பின்கள், ஆமைகள், கடல் குதிரை, ஜொலிக்கும் கடற்பாசிகள் என 400க்கும் அதிகமான அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன.

குருசடை தீவின் அழகை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் வனத்துறை சார்பாக படகு சவாரி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. ஒரு நபருக்கு ரூ.300 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே படகு இயக்கப்படும். கடலின் அழகை கண் கெட்டாமல் ரசித்தபடியே பயணம் செல்லலாம்.

மோசமான வானிலை ஏற்பட்டால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் ரூ.300 போதுமா? ராமேஸ்வரத்தில் இருக்கும் ”மினி அந்தமான் ” - குருசடை தீவு தெரியுமா?
ஊட்டி : மலை வாசஸ்தலத்தில் மறைக்கப்பட்ட ”பனிச்சரிவு ஏரி” குறித்து தெரியுமா? பட்ஜெட் Spot

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com