சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் இன்று முதல் தொடக்கம் - பேக்கேஜ் எவ்வளவு தெரியுமா?

உணவகங்கள், விளையாட்டு தளங்கள், கலைநிகழ்வுகளுக்கான அரங்க வசதிகள் இருக்கும். கப்பலில் விருந்து, கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் ஆழ்கடல் பகுதியில் திருமணங்கள் நடத்துவதற்கு, அலுவலக சந்திப்புகளை நிகழ்த்துவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 Cordelia Ship
Cordelia Ship Twitter
Published on

கப்பல் என்று சொன்னது நம் நினைவிற்கு வருவது டைட்டானிக் கப்பல் தான். இது போன்ற சொகுசு கப்பலில் பயணிக்க வேண்டும் என்று டைட்டானிக் படத்தைப் பார்த்த அனைவரும் ஆசைப்பட்டிருப்போம். பயண பிரியர்களின் ஆர்வத்திற்குத் தீனி போடும் விதத்தில் சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஜூன் மாதம் முதல் சென்னை துறைமுகத்திலிருந்து கப்பலில் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Luxury Ship
Luxury ShipTwitter

2 நாள் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். விசாகப்பட்டினம் – சென்னை வழியாகப் புதுச்சேரி செல்லும் சொகுசு கப்பல் பயணத் திட்டமும் தொடங்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் குறிப்பிட்டிருந்தார்.

cordelia நிறுவனத்தைச் சேர்ந்த இந்த சொகுசு கப்பல் 11 தளங்கள் கொண்டது. சுற்றுலா திட்டங்களுக்கு ஏற்ப ரூ 22,915 முதல் ரூ 2,37,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

 Cordelia Ship
Cordelia ShipTwitter

உணவகங்கள், விளையாட்டு தளங்கள், கலைநிகழ்வுகளுக்கான அரங்கம் வசதிகளுடன் கப்பல் விருந்து, கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் ஆழ்கடல் பகுதியில் திருமணங்கள் நடத்துவதற்கு, அலுவலக சந்திப்புகளுக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 Cordelia Ship
சம்மருக்கு யாரும் செல்லாத சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டுமா? அப்ப இதப்படிங்க பாஸ்

செப்டம்பர் 23-ம் தேதி வரை சென்னையிலிருந்து ஆழ்கடல் சுற்றுலா, விசாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய இடங்களுக்குச் சுற்றுலா செல்லும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Cordelia Ship
உலக சுற்றுலா : இந்தியாவிலிருந்து இந்த 10 நாடுகளுக்கு நீங்கள் பைக் ரைட் செய்யலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com