பிரபல யூடியூபரான மதன் கௌரி தான் பதிவிட்ட வீடியோவுக்காக மன்னிப்புக் கேட்டு நேற்று புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
கடந்த ஒருவாரமாக அரசியல் களத்திலும் இணையத்திலும் பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்.
அந்த ஆவணப்படம் குஜராத் கலவரத்திற்கும் அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கும் இருக்கும் தொடர்பை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்திய அரசு இந்த ஆவணப்படத்தை தடை செய்திருந்தாலும், பல அரசியல் குழுக்கள், மாணவர் அமைப்புகள் இதனை திரையிட்டு வருகின்றனர்.
இந்த ஆவணப்படம் குறித்துப் பேசிய மதன் கௌரி, "குஜராத் கலவரம் நம் நாட்டில் நடைபெற்ற சம்பவம். இது குறித்து பிபிசி என்ற பிரிட்டிஷ் நிறுவனம் ஏன் பேச வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பும் விதமாக பேசியிருந்தார்.
மதன் கௌரியின் இந்த பேச்சு பாஜக அரசுக்கு ஆதரவாக அமைந்தது. மேலும் பலரைக் காயப்படுத்தியிருந்தது.
"சிரியா, ஆப்கானிஸ்தான் பிரச்னைகளைப் பற்றி வீடியோக்கள் எடுக்கும் மதன் கௌரி, இந்தியாவைப் பற்றி வெளிநாட்டு நிறுவனம் பேசக்கூடாது எனக் கூறுவது சரியா?" எனப் பலர் கேள்வி எழுப்பினர்.
நேற்று தனது பிபிசி ஆவணப்படம் குறித்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கினார் மதன் கௌரி.
மேலும் தனது வீடியோவால் காயப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு ட்வீட்டில் 'தான் தவறான நிலைப்பாட்டை எடுத்துவிட்டதாகவும், தன் தவறுகளை திருத்திக்கொண்டதை செயல்கள் மூலம் நிரூபிப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.'
தான் பேசியது என்ன என்பது குறித்தும் மன்னிப்புக் கேட்டது ஏன் எனவும் விளக்கி மதன் கௌரி புதிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "குஜராத் கலவரத்தை மறைக்கும் விதமாக பேசுவது என் எண்ணமல்ல. அந்த கலவரத்தின் போது பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு குறித்து நான் ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறேன்." எனப் பேசியிருந்தார் மதன் கௌரி.
பில்கிஸ் பானு குறித்த மதன் கௌரியின் வீடியோ :
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust