மதுரை : நவராத்திரி கொலு பொம்மைகளுக்காகவே பிரபலமான இந்த கிராமத்தை பற்றி தெரியுமா?

நவராத்ரி சமயத்தில் அழகிய பொம்மைகளை அடுக்கி கொலு வைப்பது வழக்கம். பல்வேறு இடங்களில் பல வண்ண கொலு பொம்மைகள் வைக்கப்படுகிறது. கொலு வைக்கும் வழக்கத்தால் புகழ் பெற்ற ஒரு கிராமத்தை பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்.
மதுரை : நவராத்திரி கொலு பொம்மைகளுக்காகவே பிரபலமான இந்த கிராமத்தை பற்றி தெரியுமா?
மதுரை : நவராத்திரி கொலு பொம்மைகளுக்காகவே பிரபலமான இந்த கிராமத்தை பற்றி தெரியுமா?twitter
Published on

இந்துகளின் முக்கியமான பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்று.

இந்த ஆண்டு நவராத்திரி இன்று தொடங்குகிறது. மத நம்பிக்கையின் படி, நவராத்திரியின் 9 நாட்களில் துர்கா தேவியின் வெவ்வேறு வடிவங்கள் வழிபடப்படுகின்றன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், மக்கள் பல்வேறு பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்களுடன் நவராத்திரியைக் கொண்டாடுகின்றனர்.

இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் துர்கா பூஜா என்ற பெயரில் கொண்டடுகிறார்கள். மைசூர் பக்கத்தில் தசரா என்றும், நவராத்திரி கொலு என்று தமிழகத்திலும் கொண்டப்படுகிறது.

நவராத்ரி சமயத்தில் அழகிய பொம்மைகளை அடுக்கி கொலு வைப்பது வழக்கம். பல்வேறு இடங்களில் பல வண்ண கொலு பொம்மைகள் வைக்கப்படுகிறது. கொலு வைக்கும் வழக்கத்தால் புகழ் பெற்ற ஒரு கிராமத்தை பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி கிராமத்தில் தான் நவராத்திரி கொலு பொம்மை தனி சிறப்புகளை பெற்று வருகிறது.

வேளச்சேரி கிராமம் கொலு பொம்மைகளுக்கு மிகவும் பிரபலமானது. பண்டிகை நாட்களில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் கொலு பொம்மைகளை கைவினைஞர்கள் உருவாக்கி வருகின்றனர்.

மதுரை : நவராத்திரி கொலு பொம்மைகளுக்காகவே பிரபலமான இந்த கிராமத்தை பற்றி தெரியுமா?
மதுரை : 7 மலைகள், 70 ஏரிகளை கொண்ட இந்த கிராமத்தை பற்றி தெரியுமா? அடடே தகவல்

தலைமுறை தலைமுறையாக இந்த பொம்மைகளை செய்து வருகிறார்கள். பல்வேறு வகையான கொலு பொம்மைகளை அதற்கான களிமண்ணை பயன்படுத்தி செய்து சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

வேளச்சேரி பகுதியில் பிரபலமான கடைகள் உள்ளன. அங்கு லட்சுமி பொம்மை, திருமண பொம்மை செட், வளைகாப்பு பொம்மை செட், 60வது திருமண பொம்மை செட், தஞ்சாவூர் நிச்சயதார்த்த பொம்மை, ஆறுமுக முருகன் பொம்மை, அனுமன் சீதா பொம்மை செட், மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் போன்ற கையால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கற்பனைக் கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்ட பொம்மைகளும் இங்கு கிடைக்கின்றன. தகவல்களின் படி, இந்த பொம்மைகள் ஒன்று ரூ. 500 முதல் ரூ. 5,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

மதுரை : நவராத்திரி கொலு பொம்மைகளுக்காகவே பிரபலமான இந்த கிராமத்தை பற்றி தெரியுமா?
மதுரை முதல் உஜ்ஜைன் வரை: இந்தியாவின் பழமையான 5 நகரங்கள் பற்றித் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com