மதுரை : 7 மலைகள், 70 ஏரிகளை கொண்ட இந்த கிராமத்தை பற்றி தெரியுமா? அடடே தகவல்

இந்த கிராமத்தில் 275 வகையான பறவைகள் வாழ்கின்றன. அரிட்டாபட்டி கிராமத்தை பல்லுயிர் கிராமமாக அறிவிக்க 11 ஆண்டுகளாக முயற்சித்து வந்த நிலையில், சமீபத்தில் அந்த கிராமம் பல்லுயிர் கிராமமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தில் ஏழு மலைகள் மற்றும் 70 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன.
மதுரை : 7 மலைகள், 70 ஏரிகளை கொண்ட இந்த கிராமத்தை பற்றி தெரியுமா? அடடே தகவல்
மதுரை : 7 மலைகள், 70 ஏரிகளை கொண்ட இந்த கிராமத்தை பற்றி தெரியுமா? அடடே தகவல்Twitter

தென்னிந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அனுபவத்தை தமிழ்நாடு மாநிலம் சுற்றுலா பயணிகளுக்கு வழங்குகிறது.

அப்படி தமிழகத்தின் பல்வேறு கிராமங்கள் அதன் தனித்துவமான கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் பற்றி இங்கே தெரிந்துகொள்ள போகிறோம்.

பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறியப்படும் அரிட்டாபட்டி கிராமம் மலைகளை உள்ளடக்கிய இடமாகும்.

மதுரைக்கு வடக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மலையை திருப்பிணையன் மலை என்று சமணக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.

சமணர் காலக் குகைகள் மற்றும் பாண்டியர் காலக் குடைவரை கோவில்கள் இங்கு அமைந்துள்ளன. இம்மலைப்பகுதிகளில் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலியல் பாரம்பரியத் தளம் உள்ளது.

பல்லுயிர் பாரம்பரிய தளம் என்றால் என்ன?

பல்லுயிர் பாரம்பரிய தளங்கள் என்பது தனித்துவமான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைக் குறிப்பதாகும்.

இவை நிலப்பரப்பு, கடலோர மற்றும் உள்நாட்டு நீர் அல்லது கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளாக இருக்கலாம்

மதுரை : 7 மலைகள், 70 ஏரிகளை கொண்ட இந்த கிராமத்தை பற்றி தெரியுமா? அடடே தகவல்
அசாம் : ஒரே ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் இந்திய கிராமம் - பின்னணி என்ன?

அரிட்டிபட்டி கிராமத்தின் சிறப்பு என்ன?

பாண்டியப் பேரரசின் ஆட்சியின் போது 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, வரலாற்று சிறப்புமிக்க ஆனைகொண்டான் ஏரி, அரிட்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள மீனாட்சிபுரம் கிராமங்களின் 193.215 ஹெக்டேர் நிலப்பரப்பு 2002 இல் பல்லுயிர் சட்டத்தின் கீழ் பல்லுயிர் மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்த தலத்தில் பல்வேறு மெகாலிதிக் கட்டமைப்புகள், கல்வெட்டுகள், ஜெயின் பாறை வடிவங்கள் மற்றும் 2200 ஆண்டு பழமையான பாறையில் வெட்டப்பட்ட கோயில்கள் உள்ளன, அவை வரலாற்று மதிப்பைக் கொண்டுள்ளன.

இந்த கிராமத்தில் 275 வகையான பறவைகள் வாழ்கின்றன. அரிட்டாபட்டி கிராமத்தை பல்லுயிர் கிராமமாக அறிவிக்க 11 ஆண்டுகளாக முயற்சித்து வந்த நிலையில், சமீபத்தில் அந்த கிராமம் பல்லுயிர் கிராமமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தில் ஏழு மலைகள் மற்றும் 70 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 2200 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.

மதுரை : 7 மலைகள், 70 ஏரிகளை கொண்ட இந்த கிராமத்தை பற்றி தெரியுமா? அடடே தகவல்
ஒரு ஊர் முழுக்க ஆண் சமையல்காரர்கள்- ராமநாதபுரத்தில் இருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com