மதுரை ரயில் தீ விபத்து: 10 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் - என்ன நடந்தது?

இந்த தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த ரயில் மொத்தம் 60 பேர் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மதுரை ரயில் தீ விபத்து: 10 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் - என்ன நடந்தது?
மதுரை ரயில் தீ விபத்து: 10 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் - என்ன நடந்தது?ட்விட்டர்

மதுரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் தீப்பிடித்ததால் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் வரை ஆன்மீக சுற்றுலா செல்ல கடந்த 17ஆம் தேதி பக்தர்கள் ஐ ஆர் சி டி சி ரயிலில் புறப்பட்டனர். இந்த ரயில் இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தது.

அப்போது சுற்றுலா ரயிலில் பயணித்த பெண் ஒருவர் சமைப்பதற்காக கேஸ் சிலிண்டரை பற்றவைத்ததாக தெரிகிறது. இதில் தீப்பற்றி அந்த கோச் எரியத்தொடங்கியது.

இந்த தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த ரயில் மொத்தம் 60 பேர் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிடிஐ வெளியிட்ட அறிக்கையில்,

அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. பயணி ஒருவர் காபி தயாரிக்க கேஸ் பற்றவைத்துள்ளார். அப்போது சிலிண்டர் வெடித்ததில் தீ பற்றியுள்ளது.

மதுரை ரயில் தீ விபத்து: 10 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் - என்ன நடந்தது?
ஒடிசா ரயில் விபத்து: உயரும் பலி எண்ணிக்கை - என்ன நடந்தது?

பயணிகள் உத்திரபிரதேசத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்துள்ளனர்.

ரயில் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் பயணிகள் தப்பிக்க இயலாமல், தீயில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவுத்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு மீண்டும் ஏற்படும் மிகப்பெரிய ரயில் விபத்து இதுவாகும்.

மதுரை ரயில் தீ விபத்து: 10 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் - என்ன நடந்தது?
ஒடிசா ரயில் விபத்து : தமிழ்நாட்டு பயணிகளின் நிலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com