மகாபலிபுரம்: 250 டன் எடை, 20 அடி உயரம் கொண்ட அசைக்கவே முடியாத பாறை - மர்ம பின்னணி என்ன?

இதன் அமைப்பு, பார்ப்பதற்கு எந்நேரமும் உருண்டு விழுந்துவிடக் கூடும் என்கிற நிலையில் தான் இருக்கும். ஆனால் சுமார் 1300 ஆண்டுகளாக ஒரு இன்ச் கூட அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது இந்த வான் இறை கல்.
மகாபலிபுரம்: 250 டன் எடை, 20 அடி உயரம்  கொண்ட அசைக்கவே முடியாத பாறை - மர்ம பின்னணி என்ன?
மகாபலிபுரம்: 250 டன் எடை, 20 அடி உயரம் கொண்ட அசைக்கவே முடியாத பாறை - மர்ம பின்னணி என்ன?ட்விட்டர்

சென்னையைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களில் ஒன்று மகாபலிபுரம்.

இங்குள்ள கற்கோவில்கள், சிலைகள் பல்லவ மன்னர் நரசிம்ம பல்லவர் கலையின் மீதும் படைப்புகளின் மீதும் கொண்டிருந்த ஆர்வத்தின் சான்றாக விளங்குகின்றன.

கோவில்கள் அல்லாது இங்குள்ள பாறைகளுக்குமே வரலாற்று பின்னணி இருக்கிறது. அப்படி ஒன்று தான் இந்த கிருஷ்ணரின் வெண்ணைப்பந்து என்றழைக்கப்படும் பாறை.

இது புவி ஈர்ப்பு விசையின் விதிகளை மீறும் வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்ன சிறப்பு?

இந்த பதிவில்...

வானிறை கல் (கிருஷ்ணரின் வெண்ணைப் பந்து)

கிருஷ்ணர் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டதும், நமக்கு தோன்றுவது வெண்ணை தான். கிருஷ்ணர் சிறுவயதில் எப்போதும் வெண்ணை திருடியதாக கதைகள் நமக்கு சொல்லுகின்றன.

அதன்படி, அவர் ஒரு முறை வெண்ணை திருடியபோது, சொர்க்கத்திலிருந்து ஒரு பந்து அளவிலான வெண்ணை கீழே விழுந்ததாகவும், அது தான் இந்த பாறை எனவும் உள்ளூர் வாசிகள் நம்புகின்றனர்.

இதனை வான் இறை கல் எனவும் அழைக்கின்றனர். அதாவது, வான கடவுளின் கல்.

இது என்னடா சப்போர்ட் இல்லம நிக்குது?

இந்த வெண்ணைப்பாறை சுமார் 250 டன் எடைக் கொண்டது. 20 அடி உயரமும், 5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாறையானது வழுக்கும் சரிவு ஒன்றில் சற்றே சாய்ந்த வண்ணம் அமைந்திருக்கிறது.

இதன் அமைப்பு, பார்ப்பதற்கு எந்நேரமும் உருண்டு விழுந்துவிடக் கூடும் என்கிற நிலையில் தான் இருக்கும். ஆனால் சுமார் 1,300 ஆண்டுகளாக ஒரு இன்ச் கூட அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது இந்த வான் இறை கல்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள், விலங்குகள் இந்த கல்லின் நிழலில் இளைப்பாறுகின்றனர், இது ஒரு சிறந்த புகைப்பட தலமாகவும் விளங்குகிறது.

பெரும் புயல்கள், சுனாமி, பூகம்பங்கள் வந்த போதும் கூட இந்த பாறை அசையாமல் அப்படியே நின்றுகொண்டிருக்கிறது

மகாபலிபுரம்: 250 டன் எடை, 20 அடி உயரம்  கொண்ட அசைக்கவே முடியாத பாறை - மர்ம பின்னணி என்ன?
Travel: கொச்சி கோட்டை முதல் வர்க்கலா வரை - கேரளாவில் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள்!

எப்படி ஒரே இடத்தில் நிற்கிறது?

இந்த பாறை அது இருக்கும் இடத்திலிருந்து அசையாமல், உருளாமல் இருக்க, உராய்வு (Friction) அல்லது புவியீர்ப்பு மையம் காரணமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால், இதன் பின்னணி இன்னும் மனித மூளைக்கு எட்டாத மர்மமாகவே இருக்கிறது.

இதனை ஆங்கிலத்தில், balancing rock என்று அழைக்கின்றனர்

மகாபலிபுரம்: 250 டன் எடை, 20 அடி உயரம்  கொண்ட அசைக்கவே முடியாத பாறை - மர்ம பின்னணி என்ன?
பழமையான Theppakkadu Elephant Camp: இங்கு சுற்றுலா பயணிகள் குவிய காரணம் என்ன?

அசைக்கவே முடியாத பாறை

1908ல் மெட்ராஸின் கவர்னராக இருந்த ஆர்தர் லாலி இந்த பாறையை ஒரு முறை அகற்ற முயற்சித்திருக்கிறார். இந்த பாறை அமைந்திருக்கும் மலையின் அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது என்று, 7 யானைகளை வைத்து பாறையை அகற்ற முயற்சித்தார் . ஆனால் அது தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

மன்னர் நரசிம்ம பல்லவர் தான் இந்த பாறையை முதன் முதலில் நகர்த்த முயற்சித்து தோற்றுப்போனார் எனவும் உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.

பெரு, ஒல்லந்தாய்டம்போ, மச்சு பிச்சுவின் ஒற்றைக்கல் பாறைகளை விட பாறை கனமானது என்று கூறப்படுகிறது.

மகாபலிபுரம்: 250 டன் எடை, 20 அடி உயரம்  கொண்ட அசைக்கவே முடியாத பாறை - மர்ம பின்னணி என்ன?
மகாபலிபுரம் முதல் தரங்கம்பாடி வரை - சென்னையிலிருந்து செல்லக்கூடிய சூப்பர் Weekend Spots

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com