நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மார்கரெட் தெரசா. இவர் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பணியிலிருந்த உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம் குடிபோதை வந்த ஆறுமுகம் என்ற நபர் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நேரத்தில் ஆறுமுகம் தன் கையில் வைத்திருந்த கத்தியால் உதவி காவல் ஆய்வாளர் மார்க்கெட் தெரசாவை தாக்கியுள்ளார். இதில் அவரது கழுத்தில் அறுத்து காயம் ஏற்பட்டுள்ளது.
இரத்த வெள்ளத்தில், சரிந்த மார்க்கெட் தெரசாவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய ஆறுமுகம் காவல்துறை விசாரணையின்போது காவல் நிலையத்தில் இருந்த கழிவறையில் வழுக்கி விழுந்ததால் வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com