NEET உண்ணாவிரத போராட்டம்: அனிதாவின் வீடியோ பார்த்து கண்கலங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வினை எதிர்த்து இன்று மதுரை மாநகர் தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
NEET உண்ணாவிரத போராட்டம்:  அனிதாவின் வீடியோ பார்த்து கண்கலங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
NEET உண்ணாவிரத போராட்டம்: அனிதாவின் வீடியோ பார்த்து கண்கலங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!twitter
Published on

நீட் தேர்வுக்கு எதிராக இன்று சென்னையில் திமுகவினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்ட களத்தில் மறைந்த மாணவி அனிதாவின் வீடியோவை பார்த்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கினார்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தகுதி தேர்வான நீட்டுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தேர்வினில் மருத்துவ படிப்பை படிக்க தேவையான மதிப்பெண் கிடைக்காததால், மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் ஆண்டுதோறும் வருகின்றது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நீட் தகுதி தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என திமுக அரசு ஆளுநரிடம் மசோதாவை அனுப்பியது. இதில் ஆளுநர் கையெழுத்திட மறுத்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்து, நீடித்துக்கொண்டு இருக்கிறது

இந்நிலையில் கடந்த வாரம் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால், மாணவர் ஜெகதீசன் தற்கொலை செய்துகொண்டார்.

துக்கம் தாளாமல் ஜெகதீசனின் தந்தையும் மரணித்தார்.

இதனையடுத்து, நீட் தேர்வினை எதிர்த்து இன்று மதுரை மாநகர் தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

மதுரையில் வருகின்ற 23ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

NEET உண்ணாவிரத போராட்டம்:  அனிதாவின் வீடியோ பார்த்து கண்கலங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
நீட் தேர்வு : உள்ளாடைகளை அகற்ற கூறினார்களா? உண்மை என்ன?

சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்று வரும் இந்த போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்கிறார்.

இந்த போராட்டத்தின்போது நீட் தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர் குறித்த காணொலி ஒளிபரப்பப்பட்டது. மேலும் மாணவி அனிதாவின் வீடியோ ஒன்றும், அவர் அளித்த பேட்டி ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. இதனை பார்த்து அமைச்சர் உதயநிதி கண்கலங்கி அழுதார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் பேசியபோது கூட "நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதனை நிச்சயம் செய்துகாட்டுவேன் என்று தெரிவித்திருந்தார்

NEET உண்ணாவிரத போராட்டம்:  அனிதாவின் வீடியோ பார்த்து கண்கலங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
நீட் : பலியான மகனும் தந்தையும் - நீட் தேர்வுக்கு முடிவு எட்டப்படுமா? என்ன சொல்கிறது திமுக?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com