Morning News Today: பேரறிவாளன் விடுதலை!- உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

"ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு" எனக் கூறியது நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு. சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்.
பேரறிவாளன்
பேரறிவாளன்Twitter
Published on

பேரறிவாளன் விடுதலை!- உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்தார். இன்று, அவர் அளித்த மனுவின் மீதான விசாரணையில், "ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு" எனக் கூறியது நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு. சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்.

இலங்கை
இலங்கைTwitter

நிவாரணப்பொருட்களுடன் இலங்கை செல்லும் தமிழக கப்பல்

தமிழக அரசு இலங்கைக்கு அனுப்புகிற நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக ‘டான் பின்-99’ என்ற கப்பல் சென்னை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இந்த கப்பலில் கடந்த 2 நாட்களாக மருந்து பொருட்கள், பால் பவுடர்கள், நிவாரண பொருட்கள் கிரைன் உதவியுடன் கப்பலில் ஏற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர், ரூ.28 கோடியில் 137 வகை அத்தியாவசிய மருந்து பொருட்கள் முதல்வரை மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில் அனுப்பி வைக்கப்படுகின்றன. சென்னை துறைமுகத்திலிருந்து புறப்படும் கப்பல், அடுத்த 44 மணி நேரத்தில் கொழும்பு துறைமுகத்தைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்
சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்Twitter

லஞ்ச வழக்கு கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!

கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஸ்கர ராமனின் வீடு அலுவலகங்களில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு விசா வாங்கித் தந்ததற்கு ரூ 50 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை விசா முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்தனர். சோதனைகளைத் தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Cannes
CannesTwitter

கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலென்ஸ்கி உரை

பிரான்சில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது, "ரஷ்யாவின் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்த, இன்றும் சினிமா ஊமையாக இல்லை என நிரூபிக்க புதிய சார்லி சாப்ளின் தேவை. சினிமா எப்போதும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். `தி கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தில் ஹிட்லர் குறித்து சார்லி சாப்ளின் பேசும் வசனத்தை மேற்கோள் காட்டிப் பேசினாா்." இந்த திரைப்பட விழாவில், கடந்த மாதம் உக்ரைனில் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டதாக்கச் சொல்லப்படும் லிதுவேனியன் திரைப்படத் தயாரிப்பாளரான மந்தாஸ் குவேடராவிசியஸ் எடுத்த மரியூபோலிஸ் 2 என்ற ஆவணப்படம் சிறப்புத் திரையிடப்படுகிறது.

பேரறிவாளன்
Amala Shaji : பிரியங்கா மோகனை விட அதிக Followers; யார் இந்த 2K கிட்ஸ்லின் Reels க்ரஷ் ?
நடராஜன் பந்தில் 4 சிக்ஸர்; மிரட்டிய சிங்கப்பூர் வீரர் - மிரண்டது SRH
நடராஜன் பந்தில் 4 சிக்ஸர்; மிரட்டிய சிங்கப்பூர் வீரர் - மிரண்டது SRHNewsSense

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெறும் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னேனோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

பேரறிவாளன்
IPL 2022 : மும்பையின் மரண அடியில் சென்னையின் கனவு தகர்ந்தது | CSK vs MI

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com