Morning News Tamil : ரிசார்டுக்கு அழைத்து செல்லப்படும் தி.மு.க வேட்பாளர்கள்

இன்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
வெற்றி கொண்டாட்டத்தில் திமுக

வெற்றி கொண்டாட்டத்தில் திமுக

Twitter

Published on

ரிசார்ட்-க்கு அழைத்துச் செல்லப்படும் வேட்பாளர்கள்

நெல்லை மாநகராட்சியில் தி.மு.க சார்பாக 44 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றுள்ள தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரும் இன்றே கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

நெல்லை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க சார்பாக 48 பேரும், கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஏழு பேர் என 55 வார்டுகளுக்கும் போட்டியிட்டதில் 51 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க மட்டும் தனியாக 44 வார்டுகளில் வென்றிருக்கிறது. அதனால் தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதால் தி.மு.க கவுன்சிலர்கள் சார்பில் மேயர் வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கிறது.

தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களில் ஒரு சிலர் மட்டுமே உடனடியாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். பெரும்பாலான வேட்பாளர்கள் மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாபைச் சந்தித்து அவருடன் இணைந்து மாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அரசு பொறியியல் கல்லூரிக்கு வந்து சான்றிதழைப் பெற்றனர். பின்னர் அனைவரும் கூட்டாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் சேர்மன் போன்ற பொறுப்புகளுக்கான தேர்தலின்போது கட்சித் தலைமை யார் பெயரையும் அறிவிக்காததால் தி.மு.க-வில் வசதி படைத்த பலரும் கோதாவில் இறங்கினர். அதனால் கட்சிக்குள் முட்டல் மோதல் ஏற்பட்டது. எனவே இந்த முறை மேயர் வேட்பாளைரை கட்சித் தலைமையே அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி கொண்டாட்டத்தில் திமுக

ஈரோடு: கவுன்சிலரான முடி திருத்தும் தொழிலாளி

நெல்லை மாநகராட்சி மேயர் கனவுடன் தி.மு.க-வில் பலரும் இருக்கிறார்கள். 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தலைமை செயற்குழு உறுப்பினரான கே.ராஜூ, முன்னாள் தச்சநல்லூர் மண்டல சேர்மன் சுப்பிரமணியன், மத்திய மாவட்ட மகளிரணி செயலாளர் மகேஸ்வரி, 12-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள கோகிலவாணி, இளைஞரணி அமைப்பாளரான கோட்டையப்பன் கருப்பசாமி, கிட்டு என்கிற கிருஷ்ணசாமி, ரவீந்திரன், 40-வது வார்டில் வென்ற வில்சன் மணித்துரை, உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன.

மேயர் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிப்பதற்கு முன்பாக வசதி படைத்த யாராவது அவர்களிடம் குதிரை பேரம் நடத்தி விடக்கூடும் என்கிற சந்தேகம் நிலவுவதால், மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரான அப்துல் வஹாப் அனைவரையும் வெளியூருக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளார். பெண் வேட்பாளர்கள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் செல்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் இன்று தங்கும் அவர்கள் பின்னர் அங்கிருந்து கேரளாவின் பூவாறு ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. நெல்லை மாநகராட்சியின் மேயர், துணை மேயர் மற்றும் மண்டலத் தலைவர் பொறுப்புக்கு கடும் போட்டி நிலவுவதால் தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைத்து குதிரை பேரம் நடப்பத்தைத் தடுக்க முயற்சி நடப்பதாத் தெரிகிறது. இருப்பினும், மறைமுகத் தேர்தல் நடக்க இருக்கும் மார்ச் 2-ம் தேதி என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்துவிடும்.

கலைஞர் சமாதியில்  ஸ்டாலின்

கலைஞர் சமாதியில்  ஸ்டாலின்

Twitter

மாபெரும் வெற்றி பெற்ற திமுக

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்தது. இதில் ஆளும் கட்சியான திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் 137-ஐக் கைப்பற்றியுள்ளது. 21 மாநகராட்சிகள் முழுவதையும், 489 பேரூராட்சிகளில் பெருவாரியனவற்றை திமுக கைப்பற்றியுள்ளது.

அண்ணாமலை

அண்ணாமலை

Twitter

பாஜக-வை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் - அண்ணாமலை

பாஜகவுடன் பயணிக்க மக்கள் தயாராகி விட்டார்கள், கடின உழைப்பால் தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மூன்றாம் இடம் வந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்கிய பாஜக, 21 மாநகராட்சியில் 22 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து, நகராட்சியில் 56 வார்டுகளிலும், பேரூராட்சியில் 230 வார்டுகளிலும் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது பாஜக. கன்னியாகுமரியில் சில இடங்களில் திமுக மற்றும் அதிமுகவை வாஷ் அவுட் செய்துள்ளது பாஜக.

"வக்களித்த அனைவருக்கும் நன்றி. பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டனர். பாஜகவை முழுமையாக ஏற்று எங்களுடன் பயணிக்க மக்கள் தயாராகிவிட்டனர். கடின உழைப்பால் நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு வந்துள்ளோம்" என வெற்றியைக் குறித்து அண்ணாமலை
பேசினார்.

உக்ரைன்

உக்ரைன்

Twitter

இந்தியர்களை அழைத்து வர உக்ரைன் புறப்படும் விமானம்

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன. உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, உக்ரைனில் தாக்குதல் நடத்த ஏதுவாக ரஷிய போர் படைகள் பெருமளவில் உக்ரைன் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரத்திலும் மோதல் ஏற்பட கூடும் என்ற அச்சத்தினால் பல்வேறு நாடுகளும் தூதர்களை திரும்ப பெற்றுள்ளன. இந்தியா உள்பட பல நாடுகள் தங்களுடைய குடிமகன்களை நாடு திரும்ப கேட்டு கொண்டுள்ளது.

இதற்கேற்ப இந்திய அரசு, உக்ரைனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள், குடிமகன்கள் உள்பட பலரை ஏற்றி கொண்டு நாடு திரும்புகிறது. இதன்படி, 241 பயணிகளுடன் ஏர் இந்தியா சிறப்பு விமானம் உக்ரைனில் இருந்து டெல்லிக்கு இன்று புறப்பட்டு உள்ளது.

கிளி பால்

கிளி பால்

Twitter

தான்சானியாவில் வசிக்கும் யூடியூப் பிரபலமான கிளி பாலுக்கு இந்திய தூதரகம் பாராட்டு

தான்சானியாவில் வசித்து வருபவர் கிளி பால். இவர் தனியாக யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்தியாவிலிருந்து வெளியாகும் படங்களில் இடம்பெறும் பிரபலமான பாடல்களுக்கு வாயசைத்து அதை யூடியூபில் பதிவேற்றி பிரபலமானவர் கிளி பால். மேலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் இவர் பிரபலமாக உள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 20 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். பாலிவுட் பிரபலங்கள் ஆயுஷ்மான் குரானா, குல் பனாக், ரிச்சா சத்தா உள்ளிட்டோர் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான்சானியாவில் உள்ள இந்தியத் தூதகரம், கிளி பாலை நேற்று முன்தினம் நேரில் அழைத்து கவுரவித்துள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்திலும் இந்தியத் தூதரகம் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான இதயங்களை வென்ற `சிறப்பு பார்வையாளர்` கிளி பால் என்று ட்விட்டர் பக்கத்தில் இந்தியதத் தூரகம் கருத்து தெரிவித்துள்ளது.

யூடியூபில் பாடல்களைப் பதிவேற்றம் செய்யும்போது அந்த நாட்டின் பாரம்பரியமான உடைகளை அணிந்து பதிவேற்றி வருகிறார். லட்சக்கணக்கான இந்திய மக்களும், தான்சானியா மக்களும் இவரது வீடியோக்களை ரசித்து வருகின்றனர். பாரம்பரிய உடைகளை அணிந்து வீடியோக்களை பதிவேற்றம் செய்வதால் இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com