Madras Day : மெட்ராஸ்னாலே இப்படித் தான... - மெட்ராஸ் வாழ்வைப் பற்றிய 5 Myths

எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கும் இந்த நகருக்கு ஒரு முறை வந்து சென்றாலே மீண்டும் மீண்டும் வரத் தோன்றும் ஈர்ப்பு சக்தி இருப்பது நிச்சயம் மர்மம் தான்.
Chennai
ChennaiTwitter
Published on

சென்னை என்றதுமே நம் கண் முன்னே சில சில கதைகள் வந்து போகும். தெருவில் சினிமா நடிகர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள், பெரிய பெரிய கட்டிடங்கள், மால்கள் இருக்கும், நவநாகரீக மனிதர்களால் நகரம் நிறைந்திருக்கும்...

இவ்வாறு நீண்டுச் செல்லும் கற்பனைகளில் பாதிக்கு மேலே, முதல் சென்னை பயணத்திலேயே முறிந்துவிடும். மீதமும் சில நாட்களில் மங்கிப் போய்விடும்.

எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கும் இந்த நகருக்கு ஒரு முறை வந்து சென்றாலே மீண்டும் மீண்டும் வரத் தோன்றும் ஈர்ப்பு சக்தி இருப்பது நிச்சயம் மர்மம் தான்.

சென்னை மீதான இந்த எதிர்பார்ப்புகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன? அதிகமாக நம்பப்படும் சென்னை பற்றிய கட்டுக்கதைகள் என்ன? என்பதைப் பார்க்கலாம்!

சென்னை நாலே தமிழ் தான?

சென்னை தமிழகத்தின் தலைநகராக இருப்பதனால் இங்கு தமிழ் தெரியாமல் வசிப்பது மிகவும் கடினமான ஒன்று என்ற கருத்து பிற மாநில மக்களிடம் இருக்கிறது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் வட மாநில மக்கள் எல்லா மாவட்டங்களிலும் தொழிலாளர்களாக வசிக்கின்றனர். சென்னை அதற்கு விதி விலக்கு அல்ல.

மும்பை, பெங்களூரு போன்ற மற்ற மாநிலத் தலைநகரங்களில் தமிழர்கள் வசிப்பது போல சென்னையில் பிற மொழிப் பேசும் மக்கள் காலங்காலமாக வசித்து வருகின்றனர்.

சென்னையில் சௌக்கார் பேட்டை, ஜார்ஜ் டவுன் போன்ற பகுதிகளில் வட இந்திய மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அங்கு இந்தி மொழி புழக்கத்தில் இருக்கிறது.

தெலுங்கு மக்களும் பூர்வீகமாக சென்னையில் வசித்து வருகின்றனர்.

இது தவிர மற்ற மொழி மக்களும் சென்னையில் வசிப்பது எளிதுதான். சென்னை வாசிகளில் பெட்டிக்கடைக்காரருக்கு கூட ஆங்கிலம் தெரியும்!

சென்னைன்னா... இட்லி, தோச, மெதுவட?

சென்னையில் பொசு பொசு இட்லியும், சாம்பாரும், மொரு மொரு தோசையும் விண்வெளியில் மிதப்பது போல மெதுவான வடையும் நாக்கில் எச்சூற வைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

ஆனால் இத்துடன் சென்னையின் உணவுப் பட்டியல் முடிந்துவிடாது.

சௌக்கார் பேட்டை பக்கம் வடபாவ், குஜராத் சாட்ஸ், கேசர் லஸ்ஸி உள்பட பல இனிப்பு வகைகள் வட இந்திய ஸ்நாக்குகள் சென்னையில் கிடைக்கிறது.

எல்லாருக்கும் பிடித்த ஏதோ ஒரு உணவு சென்னையில் நிச்சயம் கிடைக்கும்.

மற்ற நகரங்கள் மாதிரி நைட் லைஃப் சென்னையில் இல்லை...

சென்னை கலாச்சார விழுமியங்கள் நிறைந்த நகரம் என்பதால் இங்கு இரவு நைட் ஷிஃப்ட் செய்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு நைட் லைஃப் என்பது கிடையாது என்ற எண்ணம் பலருக்கு இருப்பதைப் பார்க்க முடிகிறது.

சென்னைக்காரர்கள் மாலையில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி அல்லது கர்நாடக சங்கீத நிகழ்ச்சிக்கு செல்வார்கள் என்று எண்ணினால் அது குறைந்தது 10 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தனை.

மொத்த இரவையும் கூட பப்பில் கழிக்க, இல்யூஷன்ஸ், 10 டவுனிங் ஸ்ட்ரீட், தி வெல்வெட்டீன் ராபிட், பிக் பேங் தியரி, மற்றும் மூன் அண்ட் சிக்ஸ் பென்ஸ் என பல நிறுவனங்கள் வந்துவிட்டது.

சென்னையின் நைட் லைஃப் இன்னும் பல வழிகளில் கொண்டாடப்படுகிறது. என்றாலும், கொரோனா பாதிப்புகள் இதனை மட்டுப்படுத்தியிருப்பது உண்மைதான்.

பாவாட தாவணி இல்லை என்றாலும் சாரி, சுடிதார் தானே...

சென்னையில் சாரியும் சுடிதாரும் அதிகம் உடுத்தப்படும் கேசுவல் ஆடைகளாக இருந்தாலும் தற்காலத்தில் மார்டன் அல்லது கார்பரேட் உடைகள் அதிகரித்திருப்பதை மறுக்க முடியாது.

சாரியும் சுடிதாரும் கூட ட்ரெண்டுக்கு ஏற்ற வடிவமைப்பில் கிடைகின்றன. நம்ம சினிமா நடிகளுக்கு சென்னையைச் சேர்ந்த நிறுவனங்களே தான் ஆடைகளை வடிவமைத்துக் கொடுக்கின்றன.

மேற்கத்திய உடைகள் மட்டுமே சென்னையின் ஃபேஷனைத் தீர்மானிப்பதில்லை. சென்னை புள்ளிங்கோ தங்களுக்கென தனித்துவமான ஃபேஷன் ஸ்டைலைக் கொண்டிருக்கின்றனர்.

Chennai
மெட்ராஸ் டே : இந்த இடங்களை சுற்றிப் பார்த்திருக்கிறீர்களா?

சென்னை என்றால் சென்னைவாசிகள் மட்டும் தான்...

இப்படி ஒரு கட்டுக்கதை இருப்பதே நம்ப முடியாததாக இருக்கிறது. எனினும் பலர் சென்னை ஒரு காஸ்மோபாலிடன் நகரம் இல்லை என எண்ணுகின்றனர்.

வந்தாரை வாழவைக்கும் இந்த நகரம் பல கலாச்சாரங்களையும் பழக்க வழக்கங்களையும் வரவேற்றிருக்கிறது.

சிந்திகள், பஞ்சாபிகள், ராஜஸ்தானிகள் மற்றும் வங்காள மக்கள் இங்கு வசிக்கின்றனர். தலையில் டர்பன் அணிந்த ஒருவரைப் பார்ப்பது சென்னையில் அதிசயமானது அல்ல.

இந்த கட்டுக்கதையும் ஒரு வகையில் உண்மைதான். எந்த மதம், சாதி, காலாச்சாரத்தை சேர்ந்தவர்களும் இங்கு வந்த பின்னர் பெருமையுடன் சொல்வது ஒரே விஷயத்தை தான்... நாங்கள் சென்னைவாசிகள்!

Chennai
மெட்ராஸ் டே : நம்மை வாழ வைக்கும் சென்னை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? | QUIZ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com