நாகை To இலங்கை : கப்பலில் பயணம் செய்ய வெறும் 6,500 ரூபாய்தானா? சூப்பர் பட்ஜெட் Trip!

இந்த கப்பலில் பயணிப்பதற்கு பாஸ்போர்ட் கட்டாயம் எனவும் சுற்றுலா விசா பெற்றுக் கொண்டுதான் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இணையதளம் அல்லது அருகில் உள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு சென்று கப்பல் பயணத்திற்கான சுற்றுலா விசா ஒரே நாளில் பெற்றுவிடலாம்.
nagai to sri lanka ship ticket price
nagai to sri lanka ship ticket priceTwitter

கப்பல் என்று சொன்னது நம் நினைவிற்கு வருவது டைட்டானிக் கப்பல் தான். இது போன்ற சொகுசு கப்பலில் பயணிக்க வேண்டும் என்று டைட்டானிக் படத்தைப் பார்த்த அனைவரும் ஆசைப்பட்டிருப்போம்.

பயண பிரியர்களின் ஆர்வத்திற்குத் தீனி போடும் விதத்தில் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேயன் துறைமுகத்திற்கு நாளை முதல் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 2 மாதத்தில் கப்பல் போக்குவரத்திற்காக பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ‘ஒரு மினி விமான நிலையம்’ போல மாறி இருப்பதாக துறைமுக அதிகாரி கூறியிருக்கிறார்.

இந்தக் கப்பலில் பயணம் செய்ய எவ்வளவு செலவாகும், பாஸ்போர்ட், விசா எல்லாம் தேவையா என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

"செரியபாணி" என பெயர் சூட்டப்பட்ட இந்த கப்பல் முழுவதும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதிகள் உள்ளன. கப்பலின் கேப்டன் உள்ளிட்ட 14 ஊழியர்கள் கொண்ட குழுவினர் இயக்கும் இந்த கப்பலில் ஒரே சமயத்தில் 150 பயணிகள் பயணிக்கலாம்.

இந்த கப்பலில் பயணிப்பதற்கு பாஸ்போர்ட் கட்டாயம் எனவும் சுற்றுலா விசா பெற்றுக் கொண்டுதான் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இணையதளம் அல்லது அருகில் உள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு சென்று கப்பல் பயணத்திற்கான சுற்றுலா விசா ஒரே நாளில் பெற்றுவிடலாம்.

துறைமுகத்திற்குள் நேரடியாக பயணிகள் கப்பலில் ஏறிவிட முடியாது, மாறாக விமான நிலையம் போன்று சோதனைகள் கடைப்பிடிக்கப்படும் அதன் பின்னரே கப்பலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

துறைமுகத்தில் இருந்து கப்பல் காலை 7:00 மணிக்கு புறப்படுகிறது என்றால் அதிகாலை 4:30 முதல் 5:00 மணிக்கே பயணிகள் வந்துவிடவேண்டும்.

துறைமுகத்திற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை பாதுகாப்புச் சோதனைகள் செய்வர். அதனைத் தொடர்ந்து டிக்கெட், விசா பரிசோதனை நடத்தப்படும்

கப்பல் பயணத்தின் போது ஒரு பயணி 50 கிலோ எடையிலான பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.

அதில் 20 கிலோவை தன்னுடன் வைத்துக் கொள்ளும் படியாகவும், 30 கிலோ கப்பலில் வைக்கக்கூடிய வகையில் இரண்டாகப் பிரித்து வைத்திருக்க வேண்டும்.

nagai to sri lanka ship ticket price
உலகின் மோசமான 7 கப்பல் விபத்துகள் - பதற வைக்கும் தகவல்கள்

கட்டணம் எவ்வளவு

இந்த பயணத்திற்கான கட்டணம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 7,670 ரூபாய் நிர்ணயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் முதல் பயணம் செய்வதற்கு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 3000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.kpvs.in. என்ற இணையதள வாயிலாக பயணத் தேதி, பாஸ்போர்ட் நகல், விசாவின் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

தினசரி நாகப்பட்டினத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:30-12:00 மணிக்கு இலங்கை சென்றடையும். அதேபோல், பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் புறப்படும் கப்பல் இரவு 5:30 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும்.

nagai to sri lanka ship ticket price
ஆயிரம் பேரை பலி வாங்கிய டைட்டானிக் கப்பல் - அறியப்படாத ரகசியங்கள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com