கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
தென் தமிழகத்தில் இப்படி மழை பெய்வது அரிதான நிகழ்வாகும். இதனை பிளைய்ன் மழை என்பார்கள். அதாவது மலைப்பகுதியில் இல்லாமல் நிலப்பரப்பில் பெய்யும் அதீத மழையினை இது குறிக்கும்.
நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். குறைந்த அளவிலான படகு சேவையே அங்கு உள்ளது.
24 மணி நேரத்தில் தூத்துக்குடி காயல்பட்டினத்தில் 93.2 சென்டிமீட்டர் அதிக மழை பதிவாகியுள்ளது. இது அந்த மாவட்டத்தில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஆகும்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் 24 மணி நேரத்தில் பெய்த 2வது அதிகபட்ச மழைப்பொழிவாக இது பதிவாகியுள்ளது. இதற்குமுன் 1992ம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள காக்காச்சியில் 96.5 செ.மீ மழை பதிவாகி இருந்தது.
இப்படி தமிழகத்தை புரட்டி போட்ட பெருமழைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
நவம்பர் 14, 1992 அன்று காக்காச்சியில் (திருநெல்வேலி டிடி) 96.5 செ.மீ
ஆகஸ்ட் 9, 2019 அன்று அவலாஞ்சியில் (நீலகிரி மாவட்டம்) 91.1 செ.மீ
நவம்பர் 14, 1992 அன்று மாஞ்சோலையில் (திருநெல்வேலி டிடி) 82.1 செ.மீ
நவம்பர் 10, 2009 அன்று கெட்டியில் (நீலகிரி ) 82 செ.மீ
ஆகஸ்ட் 8, 2019 அன்று அவலாஞ்சியில் (நீலகிரி மாவட்டம்) 82.0 செ.மீ.
நவம்பர் 27, 2008 அன்று ஒரத்தநாட்டில் (தஞ்சாவூர் டிடி) 65.6 செ.மீ.
ஜூலை 13, 1943 அன்று முகூர்த்தி ரிட்ஜ் டாப் (நீலகிரி ) இல் 64.8 செ.மீ.
1992 நவம்பர் 14 அன்று நாலாமூக்கில் (திருநெல்வேலி ) 61.2 செ.மீ
மே 18, 1943 அன்று கடலூரில் 57.2 செ.மீ
நவம்பர் 27, 2008 அன்று தஞ்சாவூரில் 52.8 செ.மீ
ஜூன் 23, 2007 அன்று அவலாஞ்சியில் (நீலகிரி மாவட்டம்) 56.2 செ.மீ
1846ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சென்னையில் 55.0 செ.மீ
நவம்பர் 20, 1970 அன்று மகாபலிபுரத்தில் (காஞ்சிபுரம் ) 54.0 செ.மீ
ஏப்ரல் 4, 2005 அன்று மண்டபத்தில் (ராமநாதபுரம் ) 51.0 செ.மீ
இந்த ஆண்டும் டிசம்பர் மாதம் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 49. செ.மீ மழை பதிவாகிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust