மதன் கௌரி யூடியூப் சேனலுக்கு Copyright Strike கொடுத்த நித்தியானந்தா- என்ன வீடியோ அது?

அந்த மெயில் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து வந்திருந்தது. காரணம் நான் என் youtube இல் ஒரு சிறிய வீடியோ பதிவிட்டிருந்தேன்.
மதன் கௌரி யூடியூப் சேனலுக்கு Copyright Strike கொடுத்த நித்தியானந்தா
மதன் கௌரி யூடியூப் சேனலுக்கு Copyright Strike கொடுத்த நித்தியானந்தாTwittter
Published on

மதன் கௌரி யூடியூப் சேனலுக்கு நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து ஒரு காப்பிரைட்ஸ் மெயில் வந்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

உலகில் நடந்த, நடக்கிற விஷயங்களைப் பற்றிய தகவல்களைத் தனது பேச்சாற்றலால் சுவாரஸ்யமாக முன்வைப்பவர் மதன் கௌரி.

அதிலும் குறிப்பாக சுவாரஸ்யமான குற்றச் சம்பவங்களை மையமாகக் கொண்டு அவர் வழங்கும் வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களைக் குவிக்கும்.

சினிமா பாடல்களுக்கு டஃப் கொடுத்து ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கும் மதன் கௌரியின் வீடியோக்கள்.

மதன் கௌரிக்கு என்று தனி ஸ்டைல் இருப்பது போன்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

இந்நிலையில் மதன் கௌரி ஒரு புதிய வீடியோ ஒன்றை தனது youtube பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

அதில் நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து அவருக்கு ஒரு காப்பிரைட்ஸ் மெயில் வந்ததாக தெரிவித்துள்ளார்.

மதன் கௌரி யூடியூப் சேனலுக்கு Copyright Strike கொடுத்த நித்தியானந்தா
மதன் கெளரி : 90'ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம் ஆனது எப்படி? யார் இவர்? - முழுமையான வரலாறு

அந்த வீடியோவில், மதன் கௌரி பேசியதாவது:

சிங்கப்பூரில் சிவனே என்று சுற்றிக் கொண்டிருக்கும் எனக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு மெயில் வந்தது. எனது youtube சேனலுக்கு காப்பிரைட்ஸ் அடித்ததாக.

முதலில் குழம்பினேன்! எப்படி அது சாத்தியம் என்று சிந்தித்தேன் ஏனென்றால் நான் யாருடைய கன்டென்ட்டையும் எடுத்து பயன்படுத்தவில்லை, முழுக்க முழுக்க என்னுடைய வீடியோவில் எனது முக மட்டுமே தெரிகிறது. அப்படியானால் எதன் மூலம் காப்பிரைட் வந்திருக்கும் என்று சிந்தித்தேன்.

அந்த மெயில் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து வந்திருந்தது. காரணம் நான் என் youtube இல் ஒரு சிறிய வீடியோவை பதிவிட்டிருந்தேன்.

மும்பை சாலையில் சென்று கொண்டிருக்கும்போது நித்தியானந்தாவின் இருக்கும் ஒரு பேனரை நகைச்சுவையாக பகிர்ந்து இருந்தேன், அதற்காக இந்த காப்பி ரைட் வந்திருக்கிறது.

ஆனால் நான் பயன்படுத்தியது நித்தியானந்தாவின் கன்டென்டே இல்லை. அது டிஸ்கவரி பிளஸ்ஸில் வந்த Godman or conman என்ற சீரிஸ் -யின் பிரமோஷன் போஸ்டர்.

Godman or conman என்ற சீரிஸ் நித்தியானந்தாவை பற்றிய கதை. உலகில் எங்கும் நான் இருக்கிறேன் என்று நித்தியானந்தா கூறுவதைப் போல் மும்பை சாலையிலும் இருக்கிறார் என்று நகைச்சுவையாக சாலை ஓரத்தில் இருந்த அந்த பேனரை எனது யூடியூபில் ஒரு ஷார்டாக பகிர்ந்து இருந்தேன்.

ஆனால் ரோட்டில் இருக்கும் ஏதோ ஒரு புகைப்படம் எடுப்பதற்கு எப்படி காப்பிரைட் அடிக்க முடியும்? எனக்கு புரியவே இல்லை.

மற்றவர்களின் கண்டன்டை எடுத்து பயன்படுத்துவதற்கு மட்டுமே உரிமை இல்லையே தவிர ஒரு படத்தையோ ஒரு புகைப்படத்தையோ, ரிவியூ செய்து கொள்ள சட்டம் உள்ளது.

இதற்கு முன்னதாக நித்தியானந்தா குறித்து பல வீடியோக்களை நான் பதிவிட்டு இருக்கிறேன்.

ஆனால் இவ்வாறு நடந்ததில்லை நித்யானந்தாவிற்கு கீழ் இருக்கிறவர்கள் யாரோ இவ்வாறு செய்கிறார்கள்.

முதலில் அவர்களை கவனியுங்கள் தலைவா! என்று நித்தியானந்தா குறித்து மதன் கௌரி இந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

மதன் கௌரி யூடியூப் சேனலுக்கு Copyright Strike கொடுத்த நித்தியானந்தா
TTF Vasan : மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வாசன் - கலாய்த்த நெட்டிசன்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com