TTF Vasan : மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வாசன் - கலாய்த்த நெட்டிசன்கள்!

டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன் மேற்கொண்ட பைக் ரைடில் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக வண்டி ஓட்டியதுடன் இரண்டு கைகளை விட்டும் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
TTF Vasan
TTF Vasan Twitter
Published on

பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன், செய்தி தொலைக்காட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு...

டிடிஎஃப் வாசன் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் பிரதான சாலையில் தன் கவாசாகி Z900 சூப்பர் பைக்கில் பயணித்தார்.

அவர் பயணிக்கும் வழி நெடுக மக்கள் கூட்டங்கூட்டமாக வந்து அவர் பிறந்தநாளுக்கு கேக் வெட்டுமாறு வற்புறுத்தினர்.

ஒரு பெரிய அரசியல் தலைவரைப் போல மக்கள் அவரை மொய்த்து எடுத்தனர். அதே சமயம் இளைஞர்கள் அவருக்கு வழி விட்டு, அவருடைய திட்டமிடப்பட்ட பிறந்தநாள் விழாவுக்கு வழியனுப்பியும் வைத்தனர். யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத வீடியோ அது. பலருக்கு அப்போது தான் டிடிஎஃப் வாசன் அறிமுகம்.

அப்போதிலிருந்து பல முறை பேச்சு பொருளானார் வாசன். சமீபத்தில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன் மேற்கொண்ட பைக் ரைடில் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக வண்டி ஓட்டியதுடன் இரண்டு கைகளை விட்டும் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதற்கிடையில் தான் அவர் மீடியாக்களை எச்சரித்து ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

TTF Vasan
Amala Shaji : பிரியங்கா மோகனை விட அதிக Followers; யார் இந்த 2K கிட்ஸ்லின் Reels க்ரஷ் ?

மேலே உள்ள வீடியோவில் 3 நிமிடத்திலிருந்து செய்தி சேனல்களுக்கான எச்சரிக்கை வீடியோவாக மாறுகிறது. சரியாக 5 வது நிமிடத்தில் "நியூஸ் சேனல்ஸ் டிடிஎஃப் பவர் தெரியாம...." எனப் பேசுகிறார் வாசன்.

வாசன் என்னவோ மாஸாக பேச அதனை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றிவிட்டது இணையசமூகம்.

TTF Vasan
அதிவேகத்தில் சென்ற டிடிஎஃப் வாசன் : அலறிய ஜி.பி முத்து - வைரல் வீடியோ
TTF Vasan
TTF Vasan : 2K கிட்ஸ்களின் நாயகன் ஆனது எப்படி? இவர் பின்னணி என்ன? - விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com