2023 டிசம்பரில் தலைநர் சென்னையும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழகமும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் இந்த பேரழிவுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் இதுபோன்ற பெருமழைகள் இனி தொடர்கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இதனை ஒட்டி உடனடியாக அடுத்த மழை வருகிறது என வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக வரும் 27ம் தேதி புதுக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்படும் என்று தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.
வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும்படி தனியார் வானியலாளர் வெதர் மேன் பிரதீப் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வதந்திகளை நம்ப வேண்டாம் என பதிவு செய்துள்ளார்.
அவரது பதிவில், "அடுத்த ஒருவாரத்துக்கு தமிழ்நாட்டில் எங்கும் கனமழை இருக்காது. இரண்டாவது வருடமாக கிறிஸ்துமஸ் தினத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுறம், திருவள்ளூர் மற்றும் கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது மிதமான மழையாக இருக்கும்."
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust