அமைச்சர் சேகர் பாபுவுக்கு இன்னொரு முகம் இருக்கிறது, அவர் பாட்ஷாவை போன்றவர் என நடிகர் ரஜினி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ”எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த புகைப்பட கண்காட்சியில், முதல்வரின் வாழ்க்கை வரலாறு காட்சியமைக்கப்பட்டுள்ளது.
மிசா சட்டத்தில் கைதானது போன்ற முக்கிய நிகழ்வுகள் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இந்த புகைப்படக் கண்காட்சிக்கு வருகை தந்திருந்தார். கண்காட்சியை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, கண்காட்சியை நன்றாக வடிவமைத்திருக்கின்றனர் என்றார்.
”மதிப்பிற்குரிய எனது நண்பர் ஸ்டாலினின் வாழ்க்கை பயணமும் அரசியல் பயணமும் ஒன்றுதான். கிட்ட தட்ட 54 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, பல படிகளை தாண்டி, பல பதவிகளை வகித்து முதலமைச்சர் ஆகியிருக்கிறார். அது மக்கள் அவரது உழைப்புக்கு கொடுத்த அங்கீகாரம்” என்றார்.
அப்போது நடிகர் ரஜினிகாந்த்துடன் திமுக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் இருந்தார். அமைச்சர் சேகர் பாபு தன்னை பல நாட்களாக கண்காட்சியை காண அழைத்து வந்தார் எனவும், ஒரு நண்பனாக சீக்கிரம் வருகிறேன் என தான் கூறியதாகவும் பேசினார்.
“சேகர் பாபுவை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர் மிகவும் விசுவாசமானவர். ரொம்பவே அன்பானவர். அவருக்கு இன்னொரு முகமும் இருக்கு. பாட்ஷா மாதிரி” என கலகலப்பாக பேசினார் ரஜினி. ரஜினியின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் கண்காட்சியை கண்ட பிறகு, பஞ்சதந்திரம் பட பாணியில், ’முன்னாடி பின்னாடி’ என குறிப்பிட்டு நகைச்சுவையாக பேசியிருந்ததும் இங்கு நினைவுக்கூரத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust