பெரம்பலூர்: சோழர்கள் முதல் சிவாஜி வரை போரிட்ட ரஞ்சன்குடி கோட்டை - திகைக்க வைக்கும் வரலாறு!

தஞ்சை அரசன் எக்கோஜி, ஆற்காடு நவாபுகளான சந்தாசாகிப், முகமது அலி, ஆங்கிலேய படைத் தலைவர்களான ராபர்ட் கிளைவ், கேப்டன் டால்டன், கேப்டன் ஜிங்கன், கேப்டன் லாரன்ஸ், பிரெஞ்ச் படைத் தளபதிகளான டி ஆர்ட்னல், புஸ்ஸி, மைசூர் மராட்டிய தளபதி முராரிராவ், ஹைதர் அலி ஆகியோர் இந்த கோட்டையில் போர் புரிந்துள்ளனர்.
பெரம்பலூர்: சோழர்கள் முதல் சிவாஜி வரை போரிட்ட ரஞ்சன்குடி கோட்டை - திகைக்க வைக்கும் வரலாறு!
பெரம்பலூர்: சோழர்கள் முதல் சிவாஜி வரை போரிட்ட ரஞ்சன்குடி கோட்டை - திகைக்க வைக்கும் வரலாறு!Twitter

பெரம்பலூர் மாவட்டத்தில் சென்னை-திருச்சி-மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரஞ்சன்குடி கோட்டை அமைந்திருக்கிறது.

மதுரை, தஞ்சாவூர், கடலூர், பாண்டிச்சேரி, வேலூர், ஆற்காடு, காஞ்சிபுரம் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் பெறும் நகரங்களை இணைப்பதனால் இந்த கோட்டை அரசர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.

இதுவே இங்கு பல போர்கள் நடைபெற காரணமாகவும் இருந்திருக்கிறது.

சோழ அரசின் சிற்றரசர்கள், விஜயநகர நாயக்கர் அரசின் பிரதிநிதிகள், ஷெர்கான் லோடி, மராட்டிய சிவாஜி, சம்பாஜி ஆகியோர் இந்த கோட்டையில் இருந்து ஆட்சி செய்துள்ளனர்.

தஞ்சை அரசன் எக்கோஜி, ஆற்காடு நவாபுகளான சந்தாசாகிப், முகமது அலி, ஆங்கிலேய படைத் தலைவர்களான ராபர்ட் கிளைவ், கேப்டன் டால்டன், கேப்டன் ஜிங்கன், கேப்டன் லாரன்ஸ், பிரெஞ்ச் படைத் தளபதிகளான டி ஆர்ட்னல், புஸ்ஸி, மைசூர் மராட்டிய தளபதி முராரிராவ், ஹைதர் அலி ஆகியோர் இந்த கோட்டையில் போர் புரிந்துள்ளனர்.

சங்க காலம் முதல் சோழர், பாண்டியர் அரசர்கள் காலம் வரை இப்பகுதி தூங்காணை என அழைக்கப்பட்டது. தூங்காணை கிராமம், ரஞ்சன்குடி, ரஞ்சன்கெடி, துருவத்துக்கோட்டை, கல்கோட்டை என பலப் பெயர்கள் வழங்கப்பட்டு இப்போது ரஞ்சன் குடிக்கோட்டையாக நிலைத்திருக்கிறது. ரஞ்சன் என்றால் அழகான என்று அர்த்தமாம்.

இந்த கோட்டையை ஆண்ட ஷோர்கான லோடி பிரஞ்சு கிழக்கிந்திய குழுவுக்கு ஒரு கோட்டையைக் கட்டிக்கொள்ளவும் வணிகம் செய்யவும் அனுமதித்தார். அதன் விளைவாகவே பாண்டிச்சேரி பிரஞ்சு காலனியானது.

போர்கள்

1649ம் ஆண்டு செஞ்சி நாயக்கப்பகுதிகளை பிஜப்பூர் சுல்தான் அடில் ஷா கைப்பற்றினார். அதன் பிறகு ஷேர்கான் லோடி இந்த பகுதியை ஆட்சி செய்தார்.

1677ம் ஆண்டு மராத்திய மன்னர் சிவாஜி இந்த கோட்டையை வென்றார். அதே ஆண்டில் சிவாஜியின் தம்பியும் தஞ்சையை ஆண்டவருமான எக்கோஜி இந்த கோட்டையில் போர்தொடுத்தார். ஆனால் அண்ணனின் படைகளை வெல்ல முடியாமல் வீடுதிரும்பினார்.

சிவாஜியைத் தொடர்ந்து 21 ஆண்டுகள் இந்த கோட்டை மராத்திய மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது மகன் ராஜாராமின் படைகள், 1968ம் ஆண்டு டெல்லி முகலாய அரசின் படைத் தளபதி  சுல் பிர்கான் படைகளிடம் தோற்றன.

1750களில் இரண்டாம் கர்நாடக போர் இங்கு நடந்தது. ஆற்காடு நவாப் வாரிசுரிமைப் போட்டியாளர்களில் ஒருவரான முகமது அலி, ஆங்கிலேயர்களுடன் இணைந்து கூட்டுப்படையை உருவாக்கினார்.

பெரம்பலூர்: சோழர்கள் முதல் சிவாஜி வரை போரிட்ட ரஞ்சன்குடி கோட்டை - திகைக்க வைக்கும் வரலாறு!
இஸ்ரேல் என்ற நாடு உருவாக ஐன்ஸ்டீன் காரணமாக இருந்தது எப்படி? - அறிவியலாளரின் மற்றொரு முகம்!

மற்றொரு போட்டியாளரான சந்தாசாகிப் பிரஞ்சு படைகளுடன் இணைந்து கூட்டுப்படையை உருவாக்கினார். இரண்டு படைகளுக்கும் கோட்டையின் வாயிலில் கடுமையான போர் நடைபெற்றுள்ளது.

எதிர்காலத்தில் இந்தியாவின் செயலாளராக இருந்த ராபர்ட் கிளைவ் இந்த போரில் உணவுப் பொருள் வழங்கும் பிரிவில் துணைநிலை அலுவலராக இருந்தாராம். இந்தப்போரில் பிரஞ்சுப்படைகள் எண்ணிக்கையில் பலமடங்கு அதிகமாக இருந்ததால் ஆங்கிலேயப்படைகள் தோற்றன.

1752ம் ஆண்டு ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேயப்படை இந்த பிரஞ்சு படைகளை எதிர்த்து மீண்டும் போரிட்டு கோட்டையைக் கைப்பற்றியது. 1769ம் ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து ஹைதர் அலி இந்தக் கோட்டையைக் கைப்பற்றினார்.

ஆனால், திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுடன் போட்டுக்கொண்ட உடன்படிக்கையின் படி இதனை ஆங்கிலேயர்களிடமே மீண்டும் ஒப்படைத்தார். இப்படி கிட்டத்தட்ட 200 ஆண்டுகளில் பல போர்கள் இந்தக் கோட்டையில் நடந்திருக்கின்றன.

இதில் பலமுறை இந்தக் கோட்டை சிதிலமடையவும் புதுபிக்கவும் செய்யப்பட்டுள்ளது. இப்போது கூட பீரங்கிகள் இந்தப் கோட்டையில் ஏற்படுத்தியிருக்கும் சேதங்களைப் பார்க்க முடியும்.

பெரம்பலூர்: சோழர்கள் முதல் சிவாஜி வரை போரிட்ட ரஞ்சன்குடி கோட்டை - திகைக்க வைக்கும் வரலாறு!
தரங்கம்பாடியில் இருக்கும் 400 ஆண்டு பழமையான டேனிஷ் கோட்டை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?

இவ்வளவு ரணகளங்களை சந்தித்த இந்த கோட்டையை கட்டியது யாராக இருக்கும் என நீங்கள் சிந்திக்கத் தொடங்கியிருப்பீர்கள். இதனைக் கூறுவதற்கு உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.

சுந்தர சோழன் காலக்கட்டத்தில்  வண்ணாற்று சிற்றரசான தூங்காணை மறவன் என்ற சிற்றரசன் சிறிய கட்டிடத்தை எழுப்பியிருக்கலாம், பின்னர் வந்த அரசர்கள் கோட்டையை மேம்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பெரம்பலூர்: சோழர்கள் முதல் சிவாஜி வரை போரிட்ட ரஞ்சன்குடி கோட்டை - திகைக்க வைக்கும் வரலாறு!
13ஆம் நூற்றாண்டு கோட்டை, 150 அடி ஆழமுள்ள குகைகள் - Gandikota பள்ளத்தாக்கின் வரலாறு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com