ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பழைய மார்க்கெட் பகுதியில் ஒரு திருமண மண்டபம் உள்ளது.
அந்த மண்டபத்தில் இருந்து பறவைகளின் அலறும் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் மண்டப உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர்
அதன் பின்னர் அந்த மண்டபத்திற்குள் சென்று பார்த்த போது ஆந்தை ஒன்று உள்ளே நடமாடிக் கொண்டிருந்தது. உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு இருந்து அந்த ஆந்தையை மீட்ட வனத்துறையினர். இது அரியவகை ஆந்தை என தெரிவித்துள்ளனர்.
அந்த ஆந்தையின் புகைப்படத்தின் அடிப்படையில் அது பார்ன் வகை ஆந்தையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது பாலைவனப் பகுதிகள், இமய மலைக்கு வடக்கே ஆசியா மற்றும் சில தீவுகளை தவிர கிட்டத்தட்ட எல்லா போதிலும் காணப்படும் என கூறப்படுகிறது.
இதன் தலை மற்றும் முதுகில் உள்ள இறகுகள் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும். அதன் அடிப்பகுதி வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக இருக்கக்கூடும். அதன் முகம் இதே வடிவில் போன்று காணப்படுகிறது. இதனடிப்படையில் பார்ன் வகை ஆந்தை (Barn-owls) என கணிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust