சாட்டை துரைமுருகன் : சிறைச்சாலைகளின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டு காட்டும் நேர்காணல்!

சமுதாய மற்றும் அரசியல் பிரச்னைகள் குறித்து பேசிவரும் சாட்டை துரைமுருகன், தான் சிறையில் அனுபவித்த கொடூரங்களையும், தமிழக சிறைச்சாலைகளின் ஊழல் பக்கங்களையும் விவரிக்கிறார்.
சாட்டை துரைமுருகன் : சிறைச்சாலைகளின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டு காட்டும் நேர்காணல்!
சாட்டை துரைமுருகன் : சிறைச்சாலைகளின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டு காட்டும் நேர்காணல்!Twitter
Published on

ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரி பாக தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு சரியான உணவு வழங்காததால் 8 பேர் இறந்து விட்டதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் சாட்டை துரை முருகன்.

சமூக வலைத்தளங்களில் சமூக மற்றும் அரசியல் பிரச்னைகள் குறித்துப் பேசிவரும் இவர் சிறைக்கு சென்றுவந்தது முதல் சிறை உரிமைகள் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

சிறைச்சாலையில் அவர் கழித்த நாட்கள் மிக மோசமன நாட்கள் எனக் கூறுகிறார். சிறையில் உணவு முதலான அடிப்படை வசதிகள் எந்த அளவு மோசமாக இருக்கின்றன என விளக்குகிறது அவரது இந்த நேர்காணல்.

Q

சிறையிலிருந்து வெளியாகி முதல் சுவாசக் காற்றை சுவாசித்தது உங்களுக்கு எப்படியிருந்தது?

A

சிறைக்கு வெளியே சுந்தந்திரமாக இருக்கும் நாம் பல வகைகளில் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருப்போம். ஆனால் சிறையிலிருந்து வந்த பின்னர் எனக்கு நாம் சிறையிலில்லாமல் வெளியிலிருப்பதே மகிழ்ச்சியான ஒன்று தான் எனத் தோன்றியது.

எது சுதந்திரம் என்பதை நான் சிறையில் தான் உணர்ந்தேன். நம்ம வாழ்க்கையில எப்போ சப்பிடணும் எப்போ தூங்கணும் என்னுடைய மனைவி பிள்ளைகள் கிட்ட எவ்வளவு நேரம் பேசணும் எல்லாரையும் இன்னொருத்தர் தீர்மானிக்கிறது பெரிய மன வலியைக் கொடுக்கும்.

Q

அரசியல் கைதியாக நீங்கள் இருந்ததால் உங்களுக்கு சிறையில் கெடுபிடிகள் குறைவாக இருந்திருக்கும் தானே?

A

சிறைக்குள் எல்லா கைதிகளும் கைதிகள் தான். அந்த காவலருக்கு கொஞ்சம் அரசியல் தெரிந்திருந்தால், உங்களைத் தெரிந்திருந்தால் கொஞ்சம் மரியாதை கிடைக்கும். எனக்கு கிடைத்தது. மற்ற படி பிற சிறைவாசிகளுக்கு கிடைக்கும் விதிகளுக்கு உட்பட்ட சலுகைகள் கூட எனக்குக் கிடைக்கவில்லை. எனக்கு சலுகைகள் கிடைத்தால் மேலிருந்து அழுத்தம் வரும் எனக் காவலர்கள் எண்ணினர்.

நான் தண்டனை பெறாத விசாரணைக் கைதிதான். ஆனால் அங்கு எல்லாமே தண்டனையாக தான் இருந்தது. நமக்குக் கொடுக்கப்படும் சாப்பாடு, கொடுக்கப்படும் போர்வை, தங்கும் அறை அனைத்துமே தண்டனை தான். மன ரீதியில் துன்புறுத்துவது தான் சிறையாக இருக்கிறது. மனித உரிமை ஆணையம் என்ன சொன்னாலும் இங்கு குற்றவாளிகள் மனிதர்களாக நடத்தப்படுவது இல்லை.

இதனால் கைதிகள் மேலும் மேலும் மன அழுத்தத்துக்கு தான் உள்ளாகின்றனர். பிரிட்டிஷ் காலத்திலிருந்த சிறைச்சாலைகள் இப்போது சிறை மற்றும் சீர்திருத்தப்பள்ளியாக மாறியிருக்கின்றன. ஆனால் இங்கு எந்த சீர்திருத்தமும் நடைபெறவில்லை.

சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் தட்டு டம்ளர் கூட நாம் தான் பணம் கொடுத்து வாங்க வேண்டும். உணவுப் பொருட்களை சரியாக வழங்குவது கிடையாது. எல்லாம் கொடுக்கப்பட்டதாக கணக்கு காட்டி ஊழல் செய்துவிடுவார்கள்.

சாட்டை துரைமுருகன் : சிறைச்சாலைகளின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டு காட்டும் நேர்காணல்!
சவுக்கு சங்கர் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடந்தது என்ன?
Q

சமுதாயத்துக்காக பேசி சிறை சென்ற நீங்கள் இதை செய்யாமலிருந்திருக்கலாம் என நினைத்ததுண்டா? சிறைச்சாலையில் இருந்த போது உங்களது மனநிலை எப்படியிருந்தது?

A

நாம் என்ன தான் சமுதாயத்துக்காக போராடினாலும் தனிமனித அளவில் சிறை நம்மை சிதைத்துவிடும். சிறையின் நிலைமை அப்படியிருக்கிறது. இப்போது பஞ்சாப் சிறையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குடும்பத்தினர் வந்து கைதியை சந்திக்க முடிகிறது. அதற்காக தனி அறை கழிவறையுடன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் வாரத்துக்கு இரு முறை மீன் குழம்பு கொடுக்கப்படுகிறது. சிறையிலிருப்பவர்களுக்கு சரவணபவன் சாப்பாடா எனக் கேட்க வேண்டாம், சிறைக்கு ஒதுக்கப்படும் பணம் சரிவர செலவிடப்படுவதில்லை என்பது தான் என் குற்றச்சாட்டு.

புழல் சிறையில் உள்ள 1-5 பிளாக் நீங்கள் வாழ்நாளில் கற்பனைக் கூட செய்ய முடியாத அளவு அசுத்தமானதாக இருக்கும். அதற்கு பினாயில் முதல் எல்லாமும் சுத்தப்படுத்த வாங்கியதாக கணக்கு காட்டுவார்கள். ஆனால் உண்மையாக அதனை சுத்தமாக வைத்திருந்தால் அங்கேயே கைதிகளுக்கு மனது ரிலாக்ஸாகும்.

பொதுவாக சிறைவாசிகளில் 20% பேர் தான் உண்மையாக குற்றம் செய்து தண்டனை பெறுபவர்கள். மற்ற 80% பேர் சூழ்நிலைக் கைதிகள் தான். அவர்களையும் குற்றவாளிகளாகவே மாற்றக் கூடிய இடமாக தான் சிறைச்சாலைகள் இருக்கிறது.

இதுவரை பலர் சிறைச்சாலைகள் குறித்து புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர். பல அரசியல் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால் எல்லாருமே சிறைகளின் இந்த பக்கத்தை சொல்ல மறுக்கிறார்கள். உண்மையில் சிறைகள் ஒரு வதைக் கூடாரமாக தான் இருக்கிறது.

சாட்டை துரைமுருகன் : சிறைச்சாலைகளின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டு காட்டும் நேர்காணல்!
நடுங்க வைக்கும் ஜப்பான் சிறைகள் - என்ன நடக்கிறது அங்கே? - அதிர வைக்கும் தகவல்கள்
Q

சிறைக்குள் ஊழல்கள்?

A

சிறைக்குள் பட்டவர்த்தனமாக ஊழல் நடக்கிறது. ஒரு எடுத்துக்காட்டாக சொல்கிறேன், பாளையங்கோட்டை சிறையிலிருந்து புழல் சிறைக்கு மூன்று காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அடுத்த 10 நாட்களில் மீண்டும் பாளையங்கோட்டைக்கே திரும்பிவிட்டனர். அதற்காக 3 லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளனர். இந்த லஞ்சப்பணத்துக்காக தான் பணியிட மாற்றமே நடக்கிறது என்று தான் எனக்கு தோன்றுகிறது.

சிறையில் ஒரு கைதிக்கு ஒரு நாளுக்கு 130 ரூபாய் அரசாங்கத்தால் ஒதுக்கப்படுகிறது. மூன்று வேளை உனவு, காலை தேநீர் மற்றும் மாலையில் நிலக்கடலை வழங்க வேண்டும். அதற்காக வழங்கப்படும் நிலக்கடலை சாப்பிடவே முடியாதபடி இருக்கும். சிறையில் யாருமே அதனை சாப்பிடுவதில்லை. இதனால் 100 கிலோ அவிக்க வேண்டிய இடத்தில் 10 கிலோ அவிப்பார்கள் மீத 90 கிலோ கடலையே இருக்காது. பில் மட்டும் தான் வரும்.

இவை எல்லாவற்றையும் ஆவணங்களாக பார்த்தால் ஊழல் நடந்திருப்பதே தெரியாது. ஒவ்வொரு சிறையிலிருந்தும் ஊழல் பணம் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் முறையாக சென்று சேர்ந்துக்கொண்டிருக்கிறது. இதற்காக நிர்வாகங்களுக்கு டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது!

சாட்டை துரைமுருகன் : சிறைச்சாலைகளின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டு காட்டும் நேர்காணல்!
’அந்த சிறை கொடூரமான சிறை' - சவுக்கு சங்கர் குறித்து அச்சம் பகிரும் பியூஷ்

கேன்டீன் ஊழல், அருவருக்கத்தக்க சாப்பாடு, சுகாதாரமின்மை, அதனால் ஏற்படும் நோய்கள் மற்றும் பல இருண்ட பக்கங்களை விவரிக்கிறார் சாட்டை துரைமுருகன். முழு நேர்காணலையும் வீடியோ வடிவில் காணுங்கள்...

சாட்டை துரைமுருகன் : சிறைச்சாலைகளின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டு காட்டும் நேர்காணல்!
’அந்த சிறை கொடூரமான சிறை' - சவுக்கு சங்கர் குறித்து அச்சம் பகிரும் பியூஷ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com