’அந்த சிறை கொடூரமான சிறை' - சவுக்கு சங்கர் குறித்து அச்சம் பகிரும் பியூஷ்

இதுவரை பெரிய அளவில் பேசப்படாத புதிய விவாதமாக எழுந்திருக்கிறது இந்த நீதிமன்றம் குறித்த உரையாடல்கள். இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் நம்மிடம் பேசினார்.
piyush manush, savukku shankar
piyush manush, savukku shankarTwitter
Published on

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் தொடர்ந்து பல அரசியல், சமூக பிரச்னைகளை யூடியூபில் பேசி வந்தார். அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அரசாங்கம் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டி வந்த அவர், சில நாட்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதித்துறையில் ஊழல் நிரம்பியிருப்பதாக அவர் அளித்த பேட்டிகள் சர்ச்சையை கிளப்ப மதுரை நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது குற்றவியல் நீதித்துறை அவமதிப்பு வழக்கு பதிந்தது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி விசாரணை மேற்கொண்டு அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கியுள்ளனர்.

சவுக்கு சங்கரின் கைது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும், தனிப்பட்ட விரோத நடவடிக்கை என்றும் பலர் நீதிமன்றத்தின் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.

இதுவரை பெரிய அளவில் பேசப்படாத புதிய விவாதமாக எழுந்திருக்கிறது இந்த நீதிமன்றம் குறித்த உரையாடல்கள். இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் நம்மிடம் பேசினார்.

சவுக்கு சங்கருக்கு பெயில்?

சவுக்கு சங்கரின் வக்கீல் அணி என்ன செய்கின்றனர் என்பது தெரியவில்லை. இந்த வழக்கில் பெயில் கிடைப்பதற்கு தான் அதிக வாய்ப்பு. ஆனாலும் உறுதியாக கூறமுடியாது. ஏனென்றால் நீதிமன்றங்கள் மிக மோசமாக பார்பனியத்திலும் மனுஸ்மிரிதியிலும் ஊறிக்கிடக்கின்றன. பெயில் கிடைக்கும் என்று தான் நம்புகிறோம்.

சவுக்கு சங்கரின் கைதை வன்மையாக கண்டித்தேன். அவரது கருத்துக்களை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு தாக்கியிருக்கிறார்.

piyush manush, savukku shankar
ஜோபைடனுடன் ஒத்துப்போகும் திருமாவளவன் - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஒரு வார்த்தை ட்வீட்

மதுரை, சென்னையைத் தவிர்த்து கடலூரில் அவரை சிறை வைத்தது ஏன்?

தண்டனை பெற்றவரின் குடும்பத்தினர் சந்திப்பதற்கு எளிதாக அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள சிறையில் தான் வைக்க வேண்டும். அது தான் சரியான முறை. பெரிய ரௌடியோ, குண்டரோ என்றால் வேறு இடங்களில் வைக்கலாம் ஆனால் சவுக்கு அப்படிப்பட்டவர் இல்லை. கடலூரில் வைத்தது தவறு. இது சவுக்கு சங்கரின் தாய்க்கும் மிகுந்த வலியைக் கொடுக்கும்.

கடலூர் சிறையில் சூப்பரின்டென்டென்ட் செந்தில் குமார் என்பவர் இருக்கிறார். மோசமான சூப்பரின்டென்டென்ட் என்ற பட்டம் அவருக்குத்தான் பொருந்தும். அவர் கொடூரமாக மனரீதியிலும் உடல்ரீதியிலும் டார்ச்சர் செய்வார். அவர் இருக்கும் இடத்துக்கு அனுப்பியது தான் கேள்வியை எழுப்புகிறது.

செந்தில் குமார் ஒரு சைக்கோ. எப்போ என்ன பண்ணுவார்னு சொல்ல முடியாது. திருச்சி, கோயம்புத்தூர் என வேலை செய்த இடமெல்லாம் அவர் மேல கம்பிளைன்ட் இருக்கு. அவர் மூலமா சவுக்குக்கு அச்சுறுத்தல் இருக்கு!

ஜி.ஆர்.சுவாமிநாதன் எதிர்தரப்புக்கு போதிய நேரம் கொடுக்கவில்லையா?

கண்டிப்பா. இந்த வழக்கு ரொம்ப சீக்கிரமா முடிக்கப்பட்டிருக்கு. இதுல கூட சவுக்கு வார்த்தைகள்ல சுவாமிநாதன் புண்பட்டு 6 மாதம் சிறை வச்சுட்டாரு. ஆனால் என்னோட வழக்குல செந்தில் குமார் என்ன அடிச்சு துன்புறித்தினார். அதனால எனக்கு ஹார்ட் அட்டாக் கூட வந்துருக்கு. கால்ல உள்காயங்கள் கூட ஆனா எனக்கு 6 வருஷம் ஆகுது கேஸ் முடியல.

காஷ்மீர் ஆர்டிகள் 370 பல மக்களுக்கான பிரச்னை. ஆனால் இன்னும் ஒரு வாய்தா கூட வரல.

சி.ஐ.ஏ வழக்கும் அப்படித்தான் இருக்கு. இந்த வழக்குல கொடுத்த வேகத்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்ந்து காட்டினா நல்லா இருக்கும்.

piyush manush, savukku shankar
தெலுங்கானாவில் மாநில ஆளுநரான தமிழிசை நடத்தப்படும் விதம் சரியானதா? - காந்தராஜ் பேட்டி

சவுக்கு சங்கருடைய பல கருத்துக்களை மறுத்து வந்த பியூஷ் இந்த வழக்குல அவர் கூட நிற்க என்ன காரணம்?

சவுக்கு சங்கர்னு இல்ல. நான் சரி தவறுன்னு தான் பாக்குறேன். கார்த்திக் கோபிநாத் வழக்குல அவருக்கு ஆதரவு. ஆனால் நித்தியானந்தாவுக்கு ஆதரவா பேசினபோது அவரை எதிர்த்தேன். ஏன்னா நித்தியானந்தாவால பாதிக்கப்பட்டதுல என் பொண்ணும் ஒருத்தர். நான் நித்தியானந்தாவை விமர்சித்ததால என் பொண்ணுக்கு தப்பான மெசேஜெஸ் அவ்வளவு வந்தது.

கள்ளகுறிச்சி விவகாரத்திலயும் அந்த பொண்ணோட கேரட்கரை ஜட்ஜ் பண்ணது தப்பு. அதுலயும் நான் க்ளியரா இருக்கேன். இந்த வழக்குலயும் க்ளியரா இருக்கேன். ஜி.ஆர்.சுவாமிநாதன் தன்னோட பவரை தப்பா யூஸ் பண்ணியிருக்கார்.

சவுக்கு, தான் பேசினதுக்கு வருத்தம் கூட தெரிவிக்கலன்னு சொல்றாங்களே?

எதுக்கு வருத்தப்படணும்? இது என்ன சாவர்க்கர் கதையா? நீதிபதி நீதிபதியா இருக்கணும். எது சரி, தப்புன்னு பாத்து தண்டனை கொடுக்கணும். ஹெச்.ராஜா ஹைக்கோர்ட்ட தப்பா பேசிட்டு மன்னிப்பு கேட்கிறார். இவங்களும் மன்னிச்சு விடுறாங்க. சாதாரண திருடன் இத பண்ணினா விடுவோமா?

சவுக்கு ஒண்ணு சொன்னா அது இல்லைன்னு நிரூபிக்கணும். மன்னிப்பு எல்லாம் தேவையில்லாத பேச்சு.

piyush manush, savukku shankar
ஸ்டாலின் குடும்ப நலனுக்காக BJP உடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறார் - சவுக்கு சங்கர் பேட்டி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com