யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலுக்கு செஞ்சிக் கோட்டை பரிந்துரை!
யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலுக்கு செஞ்சிக் கோட்டை பரிந்துரை!Twitter

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலுக்கு செஞ்சிக் கோட்டை பரிந்துரை!

இந்த கோட்டை வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு பொக்கிஷம். செஞ்சியில் முதலில் கோட்டை கட்டி ஆண்டவர்கள் கோன் வம்ச அரசர்கள். ஆனந்தக் கோன் இந்த வம்சத்தின் முதல் மன்னர்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை 2024-25-ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெற பரிந்துரைக்கப்படுவதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 830 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட செஞ்சிக் கோட்டை, முழுமையான வடிவத்துடன் மிச்சமிருக்கும் ஒரே தமிழ் மன்னர்களின் கோட்டை ஆகும்.

இந்த கோட்டை வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு பொக்கிஷம். செஞ்சியில் முதலில் கோட்டை கட்டி ஆண்டவர்கள் கோன் வம்ச அரசர்கள். ஆனந்தக் கோன் இந்த வம்சத்தின் முதல் மன்னர்.

பின்னர் விஜயநகர இராச்சியத்தின் ஆட்சியாளர்கள் தற்போதுள்ள கோட்டையை மேம்படுத்தினர். பெரிய கோட்டை, உயரமான சுவர்கள் மற்றும் அரண்களைக் கொண்டுள்ளது. மேலும் இது 'கிழக்கின் டிராய்' என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திய அரசு சாா்பில் 12 புவியியல் மற்றும் நிலப் பகுதிகள் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெற யுனெஸ்கோவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செஞ்சிக்கோட்டை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெற பரிந்துரைக்கபட்டுள்ளது.

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலுக்கு செஞ்சிக் கோட்டை பரிந்துரை!
மத்திய பிரதேசத்தில் இருக்கும் இந்த அற்புத குவாலியர் கோட்டை பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com