அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

குறிப்பாக, கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!Twitter

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கரூர், கோவை உட்பட பல்வேறு இடங்களில் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஹைதராபாத், பெங்களூருவிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 40 கோடி ரூபாய் மோசடி செய்தாக குற்றச்சாட்டு எழுந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
HBD M K Stalin : முதல் தோல்வி டூ முதல்வர் - மு க ஸ்டாலின் குறித்த 25 விஷயங்கள்

அந்த விவகாரம் தொடர்பான வழக்கில், இரண்டு வாரங்களில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
ஸ்டாலின் - கனிமொழி டு ராகுல் - பிரியங்கா; இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத உடன்பிறப்புகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com