ஷர்மிளா : கோவை பெண் ஓட்டுநருக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன் - என்ன காரணம் சொல்கிறார்?

வேலை போன உடனே மற்றொரு தனியார் பேருந்து ஷர்மிளாவுக்கு வேலை கொடுக்க முன்வந்தது. ஆனால் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், இனி யாரிடமும் வேலை செய்ய போவதில்லை எனவும், தான் சொந்தமாக தொழில் தொடங்க போவதாகவும் ஷர்மிளா கூறியிருந்தார்.
ஷர்மிளா : கோவை பெண் ஓட்டுநருக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன் - என்ன காரணம் சொல்கிறார்?
ஷர்மிளா : கோவை பெண் ஓட்டுநருக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன் - என்ன காரணம் சொல்கிறார்?Twitter
Published on

கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் பஸ் ஓட்டுவது தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாவதுண்டு.

கடந்த சில தினங்களுக்கு முன் கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பஸ்சில் பயணித்தபடியே பேசி சென்றார்.

கனிமொழி பயணம் செய்துவிட்டு சென்ற சில மணி நேரத்திலேயே பணியில் இருந்து ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால் பெண் நடத்துனருக்கு பேருந்தின் உரிமையாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியது.

வேலை போன உடனே மற்றொரு தனியார் பேருந்து ஷர்மிளாவுக்கு வேலை கொடுக்க முன்வந்தது. ஆனால் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், இனி யாரிடமும் வேலை செய்ய போவதில்லை எனவும், தான் சொந்தமாக தொழில் தொடங்க போவதாகவும் ஷர்மிளா கூறியிருந்தார்.

ஷர்மிளா : கோவை பெண் ஓட்டுநருக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன் - என்ன காரணம் சொல்கிறார்?
ஷர்மிளா : கோவை பெண் ஓட்டுநர் பணி நீக்கம் - கனிமொழியின் விளக்கம் என்ன?

இந்நிலையில், கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசல் கார் ஒன்றை இன்று பரிசாக வழங்கினார்.

கமல் பண்பாட்டு மையம் சார்பாக அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து விலகிய நிலையில், ஷர்மிளாவுக்கு கார் பரிசளிக்கப்பட்டது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

”தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.”

”தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை. கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார்.

ஆண்டாண்டு காலமாய் அடக்கிவைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஷர்மிளா : கோவை பெண் ஓட்டுநருக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன் - என்ன காரணம் சொல்கிறார்?
ஷர்மிளா : கனிமொழி பயணித்த பிறகு தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் பணி நீக்கம் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com