PTR பழனிவேல் தியாகராஜன் நக்கல் ட்வீட் : சரி, அவர் குறிப்பிட்ட சிண்ட்ரெல்லா கதை தெரியுமா?

நேற்று மதுரை விமான நிலையத்திற்கு வந்த தமிழ அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணிகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமைச்சரோ, அந்த சிண்ட்ரெல்லா காலணியை அவரது நிர்வாகிகள் பத்திரமாக வைத்திருப்பதாக பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது
PTR பழனிவேல் தியாகராஜன்
PTR பழனிவேல் தியாகராஜன்NewsSense
Published on

தன் காரின்மீது வீசப்பட்ட செருப்பு குறித்து பி டி ஆர் பகிர்ந்த சிண்ட்ரெல்லா ட்வீட் வைரலாக பரவி வருகிறது. அந்த ட்வீட்டில் அவர் சிண்ட்ரெல்லா குறித்து குறிப்பிட்டுள்ளார்.

சரி, அந்த சிண்ட்ரெல்லா செருப்பு கதை என்னவென்று தெரியுமா? இது குறித்து எழுத்தாளர் ஷாஜகான் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

சிண்ட்ரெல்லா செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவள். இளம் வயதிலேயே தாயை இழந்து விடுகிறாள். அப்பா வேறொரு திருமணம் செய்து கொள்கிறார். புதிதாக வந்த சித்தி கொடுமைக்காரி. அவளுக்கு இரண்டு மகள்கள். அவர்களும் அம்மாவைப்போலவே. சிண்ட்ரெல்லா வீட்டில் எல்லா வேலைகளும் செய்ய வேண்டிய நிலை.

Twitter

இளவரசருடன் சந்திப்பு:

ஒருநாள் அந்த நாட்டின் இளவரசன் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கிறான். மேலும் பார்ட்டியில் தன்னோடு நடனமாடுபவர்களில் யாரைத் தனக்குப் பிடித்திருக்கிறதோ, அந்த பெண்ணை திருமணம் செய்வேன் என்கிறான் - கிட்டத்தட்ட சுயம்வரம் போல.

சித்தி தன் மகள்களை அலங்கரித்து அனுப்புகிறாள். சிண்ட்ரெல்லா போக முடியாது. அவளுடைய நிலையைக் கண்ட ஒரு தேவதை உதவ முன்வருகிறது. அவளுக்கு அழகான ஆடைகளைக் கொடுத்து, அலங்காரம் செய்வித்து, அழகான தேரையும் கொடுத்து அனுப்புகிறது தேவதை. நள்ளிரவுக்குள் வந்துவிட வேண்டும், அதுவரைதான் மந்திர சக்தி தாங்கும் என்று சொல்கிறது தேவதை.

பி டி ஆர்
பி டி ஆர்டிவிட்டர்

காலணியை தொலைத்த சிண்ட்ரெல்லா:

சிண்ட்ரெல்லா போகிறாள். இளவரசனுடன் நடனமாடுகிறாள். அவனுக்கும் அவளைப் பிடித்துப்போகிறது. தன்னிலை மறந்து போகிறார்கள். அப்போதுதான், நள்ளிரவுக்குள் திரும்ப வேண்டும் என்கிற நினைவு வருகிறது சிண்ட்ரெல்லாவுக்கு. அவசர அவசரமாகப் போகும்போது, அவளுடைய ஒரு செருப்பைத் தவறவிட்டு விடுகிறாள்.

இளவரசன் அவளைத் தேடுகிறான். அவளை எங்குமே காணோம். சித்திதான் அவளை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறாளே! இளவரசன் தன் ஆட்களை அனுப்பி வீடுவீடாகத் தேடச் சொல்கிறான். சிண்ட்ரெல்லா விட்டுவிட்டுப்போன செருப்பைக் கொடுத்து, இந்தச் செருப்பு யார் காலுக்குப் பொருந்துகிறது என்று கண்டுபிடித்து அழைத்துவரச் சொல்கிறான்.

சிப்பாய்கள் நகரம் முழுவதும் தேடிவிட்டு, சிண்ட்ரெல்லா வீட்டுக்கும் வருகிறார்கள். செருப்பு அவளுக்குப் பொருந்துகிறது. அவள் தன்னிடமிருந்த மற்றொரு செருப்பையும் காட்டுகிறாள்.

அவள்தான் என்று தெரிந்து கொண்ட இளவரசன் அவளைத் திருமணம் செய்துகொண்டு, சிண்ட்ரெல்லா மகிழ்ச்சியுடன் வாழ்கிறாள்.

இந்த கதையை நாம் சிறுவயது முதல் நிறைய கேட்டிருப்போம். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன் காரின் மீது வந்து விழுந்த பெண்கள் அணியும் ஒற்றை காலணியை இந்த சிண்ட்ரெல்லா கதையோடு இணைத்து நக்கலாக ட்வீட் செய்துள்ளார்.

அந்த காலணியை அவரது ஆட்கள் பத்திரமாக வைத்திருப்பதாக கொஓறிய தியாகராஜன், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள், கட்சி நிர்வாகிகளுடன் பெண் எப்படி உள்ளே ந்ழைந்தார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்

PTR பழனிவேல் தியாகராஜன்
ஆந்திர முதல்வரின் தாயார் சென்ற கார் டயர் வெடிப்பு - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com