South Tamilnadu: வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் - மீட்க போராடும் அரசு

கிராமங்கள் தகவல் தொடர்பு இல்லாமல் தனித்தீவுகளாக மாறிவிட்டன. உதவி தேவைப்படும் மக்கள் கேட்க முடியாமலும் உதவ தயாராக இருக்கும் தன்னார்வலர்கள் எங்கு செல்வதென தெரியாத நிலையிலும் இருக்கின்றனர்.
South Tamilnadu: வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் - மீட்க போராடும் அரசு
South Tamilnadu: வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் - மீட்க போராடும் அரசு Twitter

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் வரலாற்றில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக காயல்பட்டினம் பகுதியில் 93.2 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 1992ம் ஆண்டு மாஞ்சோலை பகுதியில் பெய்த 96.5 செ.மீ மழைக்கு பிறகு இதுவே தமிழகத்தில் பெய்த அதிகபட்ச மழையாகும்.

மழை வெள்ளத்தால் குளங்கள், கம்மாய்கள் முற்றிலுமாக நிறைந்துள்ளன. ஏரிகளின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் பாய்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

கிராமங்கள் தகவல் தொடர்பு இல்லாமல் தனித்தீவுகளாக மாறிவிட்டன. உதவி தேவைப்படும் மக்கள் கேட்க முடியாமலும் உதவ தயாராக இருக்கும் தன்னார்வலர்கள் எங்கு செல்வதென தெரியாத நிலையிலும் இருக்கின்றனர்.

தென் மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் நாளையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

தேனி, திண்டுகல், மதுரை ஆகிய மவட்டங்களிலும் அதிகனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி செல்லும் அனைத்து சாலைகளும் வெள்ளகாடாக மாறிவிட்டதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கிவிட்டதால் இரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

திருசெந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் சென்றுகொண்டிருந்த பயணிகள் (கிட்டத்தட்ட 100 பேர்) திருவைகுண்டம் ரயில் நிலையத்தில் உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்றிரவு ட்ரை வீக்லி விரைவு ரயில் தாதன்குளம் அருகே நிறுத்தப்பட்டது. 800 பயணிகளில் 300 பேர் அருகில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 500 பேர் ரயிலிலேயே தவித்து வருகின்றனர்.

South Tamilnadu: வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் - மீட்க போராடும் அரசு
சென்னை : ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000 கிடைக்குமா? வெளியான தகவலின் பின்னணி என்ன?

பி.எஸ்.என்.எல் உள்பட பல நெட்வர்க்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தகவல் தொடர்பு சவாலானதாக மாறியிருக்கிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு வழங்குதல் மற்றும் மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 11 மணி நிலவரப்படி தூத்துக்குடியில் ஒருவர் மட்டும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என பதிவாகியிருக்கிறது. விருதுநகரில் வீட்டிற்குள் இரவில் வெள்ளம் புகுந்ததால் மூதாட்டி மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி சாய்வான நிலப்பரப்பாக இருப்பதனால் விரைவாக வெள்ள நீர் வடியும் என்றும் தூத்துக்குடி தாழ்வான பகுதி என்பதனால் வெள்ள நீர் வடிய அதிக நேரமெடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்ற பெருமழைகள் வருங்காலங்களில் எதார்த்தமாக இருக்கும் என சூழலியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

South Tamilnadu: வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் - மீட்க போராடும் அரசு
நெல்லை To சென்னை: தமிழகத்தை புரட்டி போட்ட பெருமழைகள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com