தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியின் உரைக்கு, பேரவையிலேயே முதல்வர் மு க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சட்டப்பேர்வையிலிருந்து பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார்.
2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
ஆளுநரை எதிர்த்து, சட்டப்பேரவையிலிருந்து திமுக கூட்டணிகட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக எம் எல் ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் நீட் தேர்வு குறித்த நடவடிக்கை பற்றி தனது உரையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசியவர் அந்த உரையில் திராவிட மாடல், அமைதிப் பூங்கா என்று குறிப்பிட்டிருந்ததை படிக்காமல் தவிர்த்திருந்தார். மேலும், தமிழ்நாடு அரசு என்ற சொல்லுக்கு பதிலாக இந்த அரசு என்று மாற்றி குறிப்பிட்டார் ஆளுநர். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
இதனையடுத்து, முன்பே அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என முதல்வர் மு க ஸ்டாலின் அவையிலேயே ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தார்.
ஆளுநர் பேசத் தொடங்கியதிலிருந்தே திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.
தமிழகம் , தமிழ்நாடு என்ற பெயர் சர்ச்சையால் ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆளுநரின் உரைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததையடுத்து, ஆளுநர் ஆர் என் ரவி சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இதை தொடர்ந்து ட்விட்டரில் #GetoutRavi டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், பாஜக மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் முதல்வரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust