அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதற்காக கே.எஸ்.ரவிகுமார், வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குநர்கள் கதைகள் கூறியுள்ளனர். ஆனால், ரஜினி தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு இயக்குநரையும் இறுதி செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பாலிவுட் ஊடகம் ஒன்று ரஜினியின் அடுத்தப் படம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. #Thalaivar169 என்ற ஹேஷ்டேகுடன் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது. ‘பீஸ்ட்’ படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரஜினி - நெல்சன் இணையும் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ‘பீஸ்ட்’ வெளியீட்டுக்குப் பிறகு ரஜினி - நெல்சன் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற‘டாக்டர்’ படத்தின் இயக்குநர் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா இன்று பெங்களூருவில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவரிடம் தேசியக் கொடி கம்பத்தில் காவி கொடி ஏற்றப்பட்ட சர்ச்சை விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஈஸ்வரப்பா, இது சர்ச்சைக்குரிய விஷயமே கிடையாது என்று பதில் கூறினார். கொடிக்கம்பம் என்பது பொதுவானது. அதில் எப்போது தேசிய கொடி மட்டும் ஏற்றப்படுவது கிடையாது என்று பதிலளித்த நிலையில் கன்னட நாடு பிறந்த தினத்தில் கொடிக்கம்பத்தில் கர்நாடக கொடியும் ஏற்றப்படுவது வாடிக்கையான ஒன்று. அதேபோல் நேற்று காவி கொடி ஏற்றப்பட்டுள்ளது. என்றாவது ஒருநாள் 200 வருடங்கள் கழித்து அல்லது 500 வருடங்கள் கழித்து நிச்சயம் காவிக்கொடி தேசிய கொடியாக மாறலாம். ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டவே முடியாது என்று கூறிவந்த நபர்களுக்கு இன்று ராமர் கோவில் கட்டப்பட்டு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் இதுவும் நடக்கக்கூடும் எனக் கூறினார்
பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி உதவியுடன் சென்னை நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 3 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்நேரத்தில் பாஜக தலைமை அலுவலகத்தின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 3 மது பாட்டில்களில் பெட்ரோல் மூலம் குண்டு வீசப்பட்டு உள்ளது.
இதனிடையே பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி உதவியுடன் சென்னை நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் நடக்கும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று அகமதாபாதில் நடைபெற்றது. இதில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச முடிவெடுத்தது.
கர்நாடகாவில் உள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி புதன்கிழமை உத்தரவிட்டது.
முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளின் விவாதத்தை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் விசாரிக்க ஒரு பெரிய அமர்வை அமைக்க முடியுமா என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது” என்று நீதிபதி தீட்சித் கூறினார். “தலைமை நீதிபதி அவஸ்தி அமைக்கக்கூடிய பெரிய அமர்வு முன் இடைக்கால கோரிக்கைகள் வைக்கப்பட வேண்டும் என்றும் இந்த் அமர்வு கருதுகிறது என்று நீதிபதி தீட்சித் உத்தரவில் குறிப்பிட்டார்.
கர்நாடக அமைச்சரவை ஹிஜாப் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க முடிவு செய்தது; மேலும், இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் அமைச்சரவையில் ஹிஜாப் சர்ச்சை பற்றி விவாதித்தோம். ஆனால், உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தை விசாரித்து வருவதால், இந்த விவகாரத்தில் அமைச்சரவை இன்று எந்த முடிவையும் எடுப்பது பொருத்தமானதாக இருக்காது என்று நாங்கள் உணர்ந்தோம். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க முடிவு செய்யப்பட்டது. என்று சட்டம் மற்றும் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஜே.சி. மதுசாமி கூறினார்.