முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு ஜாமீன் கொடுத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களை விடுவிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே, அவர்களது விடுதலையில் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிட்டது. அதையடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக முடிவெடுக்காமலிருந்த தமிழக ஆளுநர், எழுவரை விடுவிக்கக் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் உள்துறை மூலம் அறிக்கை அளித்தார்.
“பேரறிவாளன் விடுதலை தொடர்பாகத் தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது. அது குடியரசுத் தலைவர் அதிகாரம்” என ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறையிலிருந்த பேரறிவாளன் தன்னை முன் கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு மனு அளித்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு இன்னும் வரவில்லை. இதனிடையே பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்து வெளிவந்தார். பரோல் கட்டுப்பாடுகள் கடினமாக இருந்ததால் பேரறிவாளன் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. “பரோலில் இருந்தாலும் கூட அவரால் வெளியே செல்ல முடியவில்லை, யாரையும் பார்க்க முடியவில்லை, வீட்டுச்சிறை போல இருக்கிறார். எனவே பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனப் பேரறிவாளன் தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
“பேரறிவாளன் விடுதலை தொடர்பாகத் தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது. அது குடியரசுத் தலைவர் அதிகாரம்” என ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
“ஆனால் நீங்கள் இதில் மிகவும் தாமதம் செய்கிறீர்களே? சம்மந்தப்பட்ட நபர் (பேரறிவாளன்) 32 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ளாரே” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கு ஒன்றிய அரசு தரப்பில், “ஏற்கனவே பேரறிவாளனுக்கான மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அவருக்கு ஒரு சலுகை வழங்கி அவரை சிறையிலிருந்து விடுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேரறிவாளனை விடுவிப்பது ஆளுநரின் முடிவுக்கு உட்பட்டது கூட கிடையாது. குடியரசுத் தலைவர் மட்டும் தான் முடிவு செய்யப்படும். பேரறிவாளன் தனக்கான வாய்ப்பை ஏற்கனவே பயன்படுத்தி விட்டார். இரண்டாவது வாய்ப்பு கிடையாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இறுதியில் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.