Sylendra Babu
Sylendra Babutwitter

சைலேந்திர பாபு : பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட தமிழ்நாடு டிஜிபி - நெகிழ்ச்சி சம்பவம்

பணியில் இருந்த காவலர் ஒருவர், தீவிரவாதியிடம் நடந்து கொள்வதை போல் தன்னிடம் மோசமாக நடந்துக் கொண்டதாக டிவிட்டரில் கொந்தளித்த இளம்பெண்ணுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு வருத்தம் தெரிவித்து பதிலளித்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

தமிழகத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் இணையத்தளம் வழியே, APP-க்கள் மூலம் புகார்களை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது ஒரு புகார் எழுந்துள்ளது. காவலர் ஒருவர் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

அதில் நேற்று அலுவலகம் முடிந்து, நானும் என்னுடைய நண்பரும் கடற்கரையில் அமர்ந்திருந்தோம். அப்போது பணியிலிருந்த காவலர் எங்களிடம் ஒரு தீவிரவாதிகளிடம் நடந்து கொள்வதை போல் நடந்து கொண்டார்.

மேலும் இது போன்று வட இந்தியாவில் 10 மணிக்கு மேல் சுற்றுங்கள் என்றார், தமிழ் பேச தெரியாது என்பதற்காக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த நான் எப்படி வட இந்தியராக இருப்பேன்? அவருக்கு நான் பதிலளித்த பிறகு அவர் என்னை காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்வேன் என்று மிரட்டினார்.

எங்களுக்கு கடற்கரைக்கு செல்ல நேரம் இருப்பது தெரியாது. காவலர் அப்படி என்னிடம் நடந்து கொள்ள நான் ஒன்றும் குற்றவாளி அல்ல' எனப் பதிவிட்டு தமிழ்நாடு காவல்துறையினர் பக்கத்தை டேக் செய்துள்ளார்.

Sylendra Babu
டெல்லி : மெட்ரோ நிலைய மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

இந்த ட்வீட் இணையத்தில் வைரலானதையடுத்து இந்தப் பதிவிற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பதிலளித்துள்ளார். அதில், 'உங்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனப் பதிவிட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

logo
Newssense
newssense.vikatan.com