தமிழ்நாடு : கோத்தகிரி முதல் ஜவ்வாது மலை வரை - அறியப்படாத சுற்றுலாத் தளங்கள்!

தமிழ்நாட்டின் ஆழமான கலாச்சாரத்தையும், இயற்கை தரும் ஆனந்தத்தையும் அனுபவிக்க விரும்புபவர்கள் எவ்வளவு சுற்றினாலும் தீராத இடங்களை தமிழகம் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு : கோத்தகிரி முதல் ஜவ்வாது மலை வரை - அறியப்படாத சுற்றுலாத் தளங்கள்!
தமிழ்நாடு : கோத்தகிரி முதல் ஜவ்வாது மலை வரை - அறியப்படாத சுற்றுலாத் தளங்கள்!Twitter

தமிழ்நாட்டின் பல்லுயிர்தன்மையும், புவியியல் அமைப்பும் சுற்றுலாப்பயணிகள் கொண்டாடக்கூடிய வகையில் இருக்கிறது.

கூட்டம் கூட்டமாக மக்கள் செல்லும் பிரபலமான தலங்கள் இல்லாமல், அறியப்படாத பகுதிகளைச் சுற்றிப்பார்க்க விரும்புபவர்களுக்கு தமிழ்நாட்டில் பல இடங்கள் இருக்கின்றன.

தமிழ்நாட்டின் ஆழமான கலாச்சாரத்தையும், இயற்கை தரும் ஆனந்தத்தையும் அனுபவிக்க விரும்புபவர்கள் எவ்வளவு சுற்றினாலும் தீராத இடங்களை தமிழகம் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உள்ள பெரும்பாலனவர்கள் அறியாத சுற்றுலாத்தளங்கள் இங்கே கொடுக்கப்படுகின்றன.

கோத்தகிரி

கடல் மட்டத்தில் இருந்து 6000 மீட்டர் உயரத்தில் இருக்கிறது கோத்தகிரி மலை. இந்த ஊரில் திரும்பும் பக்கமெல்லாம் வியூ பாயிண்ட்களைப் பார்க்கலாம்.

முக்கியமாக கொடநாடு வியூபாயிண்ட் பரிந்துரைக்கப்படுகிறது. இங்குள்ள ரங்கஸ்வாமி தூணை மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டும்.

கோத்தகிரியை சுற்றிப்பார்க்கையில் மனம் புத்துயிர்பெருவது நிச்சயம். திருவிழா நேரத்தில் காய்கறித் தோட்டங்களை ரசிக்கலாம். காய்கறி கண்காட்சியைப் பார்வையிடலாம். அருவிக்குளியலும் குறிப்பிடத்தக்கது.

வால்பாறை

மலைப்பாங்கான குக்கிராமமான வால்பாறை சுற்றுலா பயணிகளை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. மேல் சோலையாறு அணை, நீராறு அணை, ஆழியாறு அணை, குரங்கு அருவி, பாலாஜி கோவில் (கரிமலை), வேளாங்கண்ணி தேவாலயம் (கரிமலை), பஞ்ச முக விநாயகர் கோயில் (சோலையாறுக்கு அருகில்)  என அங்கு பார்க்க பல இடங்கள் இருக்கின்றன.

இயற்கை எழில்கொஞ்சும் பாதை வழியாக  சின்னக்கல்லார் அருவிக்கு செல்லலாம்.

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நீலகிரி வரையாடுகளைப் பார்க்க முடியும். சோலைமந்தி, கேளையாடு (குரைக்கும் மான்கள்), காட்டுப்பன்றிகள், நீலகிரி மற்றும் பொதுவான மந்தி (லங்கூர்)  உள்ளிட்ட விலங்குகளும் இருக்கும்.

மலை இருவாட்சி, மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி மற்றும் மலபார் சாம்பல் இருவாச்சி முதலிய பறவைகளையும் காணலாம்.

தேனி

தேனியில் நம் விடுமுறையை மறக்கமுடியாததாக மாற்றும் பல இடங்கள் இருக்கின்றன. மலை, அருவிகளை ரசிப்பவர்களுக்கு தேனி சொர்கமாக இருக்கும்.

வெள்ளிமலை, மேக மலை முதலிய இடங்கள் அழகின் உச்சமாக தெரியும். வைகை ஆறு தேனியில் தான் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பகரை அருவி, சுருளி அருவி போன்ற அழகிய அருவிகளிலும் குளிக்கலாம். தேனியில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மலையேற்றமும் செய்யலாம்.

தமிழ்நாடு : கோத்தகிரி முதல் ஜவ்வாது மலை வரை - அறியப்படாத சுற்றுலாத் தளங்கள்!
ஈரோடு : பவானி முதல் சத்தியமங்கலம் வரை - சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் என்ன?

ஜவ்வாது மலை

மலைக்கிராமத்து மண்வாசத்தை அனுபவிக்க ஏங்குபவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாக இங்கு தான் செல்ல வேண்டும்.

ஜில்லென்ற காற்றும் தினை, சாமை, தேன், வரகு, மிளகு என பயிர்களின் வாசமும் ஜவாது மலையை நிறைத்திருக்கும்.

இங்குள்ள கிராமங்களில் குள்ளர் குகைகள் இருக்கின்றன. இதில் குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் முதல் நபம்பர் இடையிலான காலத்தில் வந்தால் பீமன் அருவி, அமிர்தி அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்கலாம்.

தரங்கம்பாடி

காரைக்குடியில் கடற்கரை ஓரமாக இருக்கிறது 1620ம் ஆண்டு கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை. இது மட்டுமின்றி இன்றும் டேனிஷ் கட்டடக்கலையில் கட்டப்பட்ட தேவாலையம், வீடுகள் இருக்கின்றன.

இங்குள்ள அருக்காட்சியம் நிச்சயமாக அனைவரும் பார்க்க வேண்டும். டேனிஷ் ஆட்சியில் இருந்த நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் அங்கு இருக்கின்றன.

தரங்கம்பாடி கடற்கரை தமிழகத்தின் அழகிய கடற்கரைகளில் ஒன்று.

தமிழ்நாடு : கோத்தகிரி முதல் ஜவ்வாது மலை வரை - அறியப்படாத சுற்றுலாத் தளங்கள்!
ISRO : விண்வெளிக்கு சுற்றுலா செல்ல ஆசையா? - டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com