எரிக் சோல்ஹிம் : அதானியின் ஆதரவாளர் திமுக அரசு குழுவில் - என்ன நடக்கிறது?

அதானிக்கு எதிராக உலக நாடுகளில் உள்ள சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் பேசிவரும் நிலையில், அதானியின் ஆதரவாளரை சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநராக அமர்த்துவது எப்படி நியாயமானதாக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எரிக் சோல்ஹிம் : அதானியின் ஆதரவாளர் திமுக அரசு குழுவில் - என்ன நடக்கிறது?
எரிக் சோல்ஹிம் : அதானியின் ஆதரவாளர் திமுக அரசு குழுவில் - என்ன நடக்கிறது?Twitter
Published on

நார்வே நாட்டைச் சேர்ந்த எரிக் சோஹிம் தமிழ்நாடு அரசின் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநராக இருப்பார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியறிக்கை மூலம் அறிய முடிகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற  காலநிலை மாற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டவரும் அதானியின் ஆதரவாளருமான இவரை தமிழக அரசு எப்படி ஐ.நா செயல் இயக்குநராக அறிவிக்கலாம் என கேள்வி எழுந்துள்ளது.

யார் இந்த எரிக், இவருக்கு எதிர்ப்புகள் கிளம்புவது ஏன்? விரிவாகப் பார்க்கலாம்.

எரிக் சோல்ஹிம் 2016 முதல் 2018 வரை ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பான UNEP செயல் இயக்குநராக இருந்தவர்.

இவர் தனது விமானப்பயணங்கள், தங்கும் விடுதி செலவுகள் போன்றவற்றுக்கு பல கோடி ஐநா நிதியை முறைகேடாக செலவிட்டார் என்கிற குற்றச்சாட்டில் 2018 ஆம் ஆண்டில் பதவி நீக்கப்பட்டார்.

இப்படி ஊழல் குற்றச்சாட்டால் தண்டிக்கப்பட்டவரை தமிழக அரசு இப்போது ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) செயல் இயக்குநர் என்று தெரிவித்திருக்கிறது.

நார்வேயின் சர்வதேச வளர்ச்சிக்கான அமைச்சரவையிலும் சுற்றுசூழல் தொடர்பான துறைகளிலும் இவருக்கு முன் அனுபவம் உள்ளது.

காலநிலை மாற்றத்தை அதானியின் ஆதரவாளர் தடுப்பாரா?

அதானி நிறுவனம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தனது நிலக்கரி சுரங்கங்கள் மூலம் பெரும் சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை அனைவரும் அறிவோம்.

நிலக்கரி தான் காலநிலை மாற்றத்துக்கு முக்கியகாரணமாகவும் இருக்கிறது.

எரிக் சோல்ஹிம் : அதானியின் ஆதரவாளர் திமுக அரசு குழுவில் - என்ன நடக்கிறது?
BJP வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவி செய்கிறதா திமுக? - சர்ச்சை கிளப்பிய சவுக்கு சங்கர்

அதானிக்கு எதிராக உலக நாடுகளில் உள்ள சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் பேசிவரும் நிலையில், அதானியின் ஆதரவாளரை சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநராக அமர்த்துவது எப்படி நியாயமானதாக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதானி நிறுவனத்தை ஒரு பசுமை நிறுவனமாக பிரச்சாரம் செய்கிறார் எரிக் சோல்ஹிம்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அதானி நிறுவனத்தின் அறிக்கைகளை பதிவிட்டு ஆதரவு தெரிவிக்கிறார்.

உலகமே அதானியை எதிர்த்து வரும் சூழலிலும் இலங்கையில் அந்த நிறுவனம் கொண்ட ஒப்பந்தத்தைக் கொண்டாடுகிறார்.

எரிக் சோல்ஹிம் : அதானியின் ஆதரவாளர் திமுக அரசு குழுவில் - என்ன நடக்கிறது?
அதானி : தனி ஒரு மனிதனின் வளர்ச்சி தான் இந்தியாவின் கௌரவமா? - வறுத்தெடுத்த மஹுவா மொய்த்ரா

தவிர, 1999 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் (ஈழப்போரில் பெருமளவில் தமிழர்கள் கொல்லப்பட்ட காலகட்டம்) ஈழத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அவர்தான் தலைமைத் தாங்கினார்.

தமிழர்களின் இனப்படுகொலையிலும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. மேலும் மியான்மர், சூடான், நேபால், புருண்டி ஆகிய நாடுகளிலும் இவர் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்.

அரசியல் ரீதியாக எரிக் சோல்ஹிம் ஒரு தீவிர வலதுசாரியாகவே அறியப்படுகிறார். மாற்று சிந்தாந்தம் கொண்டவரை திமுக அரசு முன்னிருத்தும் முரண் கேள்விக்குட்படுகிறது.

எரிக் சோல்ஹிம் : அதானியின் ஆதரவாளர் திமுக அரசு குழுவில் - என்ன நடக்கிறது?
கெளதம் அதானி : சரிவு இந்தியாவின் இந்த துறையை எப்படி பாதிக்கும் தெரியுமா? விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com