தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி பிப்ரவரி 4-ந் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். சனிக்கிழமையான நாளையும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4ம் தேதி மாலை 5 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பிப்ரவரி 5ல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாளாகவும்.
இந்த வேட்புமனு தாக்கலை பெறுவதற்காக மண்டல வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பெறுத்தவரை 37 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் தங்களுடன் மூன்று நபர்களை மட்டும் அழைத்துவர வேண்டும் எனவும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.